” மீண்டும் சி.எஸ்.கே அணிக்காக விளையாட்டுவீர்களா ? ” என்ற ரசிகரின் கேள்விக்கு உருக்கமான பதிலளித்துள்ள அஷ்வின்

0
362
Ravichandran Ashwin YouTube Channel

இந்திய அணியின் தற்போதைய ஜாம்பவான் ஸ்பின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்போது தன்னுடைய ஆதிக்கத்தை போட்டிக்கு போட்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீண்ட நாட்களாக அவர்களை விளையாடாத நிலையில் மீண்டும் டி20 போட்டிகளில் தற்பொழுது விளையாட தொடங்கியிருக்கிறார்.

அவருடைய கதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் ஆரம்பித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2015ஆம் ஆண்டு வரை அவர் விளையாடினார். சென்னை அணியில் 330 7.4 ஓவர்கள் வீசி 90 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். சென்னை அணியில் விளையாடிய பொழுது அவருடைய பௌலிங் ஆவெரேஜ் 24.22 மற்றும் எக்கானமி 6.46 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் எனது பள்ளிக்கூடம் போன்றது

சமீபத்தில் ஒரு உரையாடலில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவீர்களா என்ற கேள்வி அவரிடம் முன்னெடுத்து வைக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவர் சென்னை மற்றும் தமிழ் எனது தாயகம். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் விளையாடத் தொடங்கினேன். என்னைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எனது பள்ளிக்கூடம் போன்றது. அங்கே நான் நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன்.

உலகில் இருக்கும் எந்த ஒரு வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை மறுக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு அணியாக அது ஐபிஎல் தொடரில் வலம் வருகிறது. நிச்சயமாக சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். மெகா ஏலத்தில் மீண்டும் சென்னை நிர்வாகத்தின் மூலமாக நான் வாங்கப்பட்டால் அது சாத்தியப்படும். நான் எந்த அணியில் விளையாட போகிறேன் என்ற முடிவு மெகா ஏலம் நடைபெறும் அன்று தான் தெரியும் என்று அஸ்வின் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார்.

மேலும் பேசிய அவர் எந்த அணியில் நான் விளையாடினாலும் என்னை நம்பி தேர்ந்தெடுத்த அந்த அணி நிர்வாகத்திற்கு என்னுடைய முழு உழைப்பை நான் தருவேன். ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து என்னை ஒரு அணி வாங்குகிறது என்றால், எனக்கு கொடுக்கப்படும் தொகைக்கு எனது முழு வியர்வையும் சிந்துவது சரி. எனவே எந்த அணியில் நான் விளையாடினாலும், அந்த அணிக்காக என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன் என்று அஸ்வின் கூறி முடித்தார்.

- Advertisement -