“பிசிசிஐ இப்படி பண்ணினா பிளேயர்ஸ் யாரும் பேராசை பிடிச்சு ஓட மாட்டாங்க” – ஆகாஷ் சோப்ரா தாக்கு!

0
105
Aakash

கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் வந்து மிகப் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தனி டி20 லீக்குகள் நடத்துகின்றன. இது இல்லாமல் மேலும் உலகத்தில் இதுவரை கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் சென்று இருக்கிறது.

இந்தியாவில் மிகப் பிரபலமாக விளங்குகின்ற டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு சில வருடங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருப்பதால் ஐபிஎல் தொடர்தான் டி20 லீக்குகளை மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஆரம்பிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள உரிமையாளர்கள் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளின் அணிகளை வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். இது தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, அமெரிக்கா என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது.

மேலும் டி20 கிரிக்கெட் வடிவம் தற்பொழுது கிரிக்கெட் உலகமயமாக்கி இருக்கின்ற காரணத்தினால், அதிக அளவில் தரமான வீரர்கள் டி20 லீக்குகளுக்கு தேவைப்படுகிறார்கள். இன்னும் சில காலத்தில் டி20 கிரிக்கெட் மட்டுமே ஒரே அணிக்காக உலகம் முழுவதும் விளையாடக்கூடிய அளவுக்கு வீரர்கள் மாறுவார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியாவிலிருந்து எல்லாவிதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாட அனுமதி தருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவின் இளம் வீரர்கள் வேறு எந்த நாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் பங்கேற்க முடிவதில்லை. ஆனால் இந்திய முதலாளிகள் அணிகள் வாங்கி இருக்கும் வெளிநாட்டு டி20 லீக்குகளுக்கு வருமானம் தர இந்திய ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே இந்த வகையிலும் இந்திய வீரர்கள் மீது பெரிய கிராக்கி வெளியே இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” ஓய்வு பெற்ற வீரர்களுக்கு தற்போது வேறு கொள்கைகள் கொண்டு வரப்பட போகிறது. இந்திய வீரர்கள் இல்லாத காரணத்தால் ஒளிபரப்பாளர்கள் பெரிய ஆர்வம் காட்டாததால், மற்ற டி20 லீக்குகளில் இந்திய வீரர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அபுதாபி துபாய் தென்னாபிரிக்கா எங்கு லீக்குகள் நடந்தாலும் அதில் ஒளிபரப்பாளர்களுக்கு கிடைக்கும் பணம் பெரிய அளவில் இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. இருந்தாலும் வீரர்கள் விஷயத்தில் தென்னாப்பிரிக்கா தொடர் தங்களது சொந்த பலத்தில் நிற்கிறது. ஆனால் மற்ற இந்தத் தொடர்கள் எல்லாமே வெளிநாட்டு வீரர்களின் பலத்தில்தான் விளையாடப்படுகிறது.

வெளிநாட்டு லீக்குகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கு கூலிங் பீரியட் ஒன்று கொண்டு வரலாம். அதாவது அவர்கள் ஓய்வு பெற்று ஒரு வருடம் கழித்து மற்ற லீக்குகளில் விளையாட முடியும் என்பது மாதிரி கொண்டு வரலாம். இது ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநில அணிக்கு விளையாடுவதற்காக செய்யப்பட்டு வருகிறது. இப்படி கொண்டு வருவதால் எந்த வீரர்களும் முன்கூட்டியே பேராசை பட்டு எந்த வீரர்களும் முடிவை எடுக்க மாட்டார்கள் என்பதை பிசிசிஐ உணர வேண்டும்!” என்று கூறியுள்ளார்!