இந்த ஆஸ்திரேலியா ஒரு போட்டியை ஜெயிச்சாலே ஆச்சரியம் – நியூசிலாந்து வீரர் மரண அடி!

0
251
BGT

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரது சிறப்பான பங்களிப்பாள் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது!

- Advertisement -

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பல முன்னாள் வீரர்களின் கணிப்பில் ஆஸ்திரேலியா அணி குறைந்தபட்சம் இந்த தொடரை 2-1 என வெல்லும் என்று இருந்தது. ஆனால் முதல் போட்டியில் இந்திய அணி மொத்தமாக எல்லா துறைகளிலும் ஆஸ்திரேலியா அணியை சுருட்டி வீச எல்லாம் மாற ஆரம்பித்திருக்கிறது!

ஆஸ்திரேலியா அணி இந்த முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று கணித்தவர்கள் அனைவரும் கூறிய ஒரே காரணம், தற்போதுள்ள ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்கள். ஆனால் இந்திய சுழற் பந்துவீச்சு ஆடுகளத்தில், அதற்கேற்றார் போல் பந்து வீசவும் பேட்டிங் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை மறந்து விட்டார்கள்.

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சைமன் டால் கூறுகையில் ” ஆஸ்திரேலியா ஒரே ஒரு டெஸ்ட்டை வென்றால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். மழை இல்லாவிட்டால் இந்திய அணி இந்த மொத்த தொடரையும் தோற்காமல் மொத்தமாக வெல்லும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா ஒரே ஒரு போட்டியில் வெல்லும் என்றால் அது அவர்களின் பேட்டிங்கால் மட்டுமே முடியும். ஆனால் தற்போது இந்தியாவிடம் 3-1, 4-0 என ஆஸ்திரேலியா தோற்பதை தவிர நான் வேறு எதையும் பார்க்கவில்லை” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா தனது உள்நாட்டில் தனக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று நாம் சொல்ல முடியுமா? எனக்கு இங்கு முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பந்து திரும்பினாலோ, இரண்டு நாட்களில் ஆட்டம் முடியும் என்றாலோ எனக்கு எந்த கவலையும் இல்லை. சுழற் பந்துவீச்சை மிகத் திறமையாக விளையாடும் டிராவிட் டெண்டுல்கர் லக்ஷ்மணன் இப்போது கிடையாது. இப்போதைய இந்திய அணியில் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் ஓரளவுக்கு சுழற் பந்துவீச்சை நன்றாக விளையாடுகிறார்கள் அவ்வளவுதான். ஆடுகளம் பச்சையாகவோ, பிரவுன் நிறத்திலோ இருந்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது!” என்று தெரிவித்திருக்கிறார்!