“அஷ்வின் ஜடேஜாவுக்காக வேலை செய்தால்.. கேஎல்.ராகுல் சிக்குவார்” – ஆகாஷ் சோப்ரா தகவல்!

0
112
Rahul

இந்திய அணி உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்கு சில நாட்களுக்கு முன்பு 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சமி காயத்தால் இடம் பெறாத நிலையில், இசான் கிஷானை தேர்வுக்குழு பரிசீலனை செய்யாமல் புறக்கணித்தது.

- Advertisement -

இதில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரலை இந்தியத் தேர்வுக்குழு வாய்ப்பு கொடுத்து அறிவித்தது.

இவர் மொத்தம் 15 முதல் தர உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இசான் கிசானை உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அனுப்பி விட்டு, அதிரடியாக இவரை உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தேசிய கிரிக்கெட்டுக்கு தேர்வுக்குழு தேர்வு செய்திருக்கிறது.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “துருவ் ஜுரல் அதிக உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் விளையாடியது இல்லை. அவர் மொத்தம் 15 போட்டிகளில் பங்கு பெற்று 19 இன்னிங்ஸ் மட்டும் விளையாடுகிறார். இவருடைய ரன் சராசரி 46 ஆக இருக்கிறது. இது அவ்வளவு பெரிய ரன் சராசரி கிடையாது. ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

இப்படிப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைப்பதற்கு இது போதும் என்று நினைக்கிறீர்களா? இது போதும் என்றால் சர்ப்ராஸ் கான் என்ன செய்ய வேண்டும்? மேலும் இசான் கிஷான் வரை தேர்வுக்கு பரிசீலனை செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டீர்கள். அவர் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி ரன்கள் எடுக்க வேண்டுமா?

துருவ் ஜுரல் ஒரு சுவாரசியமான தேர்வு. அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. கேஎல்.ராகுல் விக்கெட் கீப்பராக இந்த தொடரில் விளையாடாமல் இருக்கலாம். அவரை இந்திய ஆடுகளங்களில் விக்கெட் கீப்பராக விரும்பாமல் இருக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில் கூட கேட்சுகள் தவறவிடப்பட்டன. யார் வேண்டுமானாலும் இப்படி தவற விடலாம். மேலும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் மூவரை முன்வைத்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டால், ராகுலை வைத்து விளையாட முடியாது!” என்று கூறியிருக்கிறார்!