எப்பா ராயுடு.. செலக்சன் கமிட்டில மொத்தம் 5 பேர் இருப்பாங்க, கேப்டனும் சேர்ந்து தான் முடிவெடுப்பார்- குற்றச்சாட்டுக்கு தக்க பதில் கொடுத்த எம்எஸ்கே பிரசாத்!

0
747

என்னை திட்டமிட்டு எம்எஸ்கே பிரசாத் பழிவாங்கிவிட்டார் என்ற ராயுடுவின் குற்றச்சாட்டிற்கு தக்க பதிலை கொடுத்திருக்கிறார் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத்.

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு மொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவுகள் அறிவித்த அம்பதி ராயுடு, 2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் எடுக்கப்படாதது குறித்து பேசினார். அப்போது இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக விஜய் சங்கர் தேர்வு செய்தது குறித்து அம்பத்தி ராயுடு ட்வீட் செய்ததும் பெரிதாக பேசப்பட்டது.

- Advertisement -

சமீபத்தில் 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் 54 எடுக்கப்படாதது குறித்து அவர் பேசியதாவது: “நான் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது அப்போது எம்.எஸ்.கே பிரசாத் கேப்டனாக இருந்தார். அவரது அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் வேறொரு அணிக்கு சென்று விட்டேன். ஹைதராபாத் அணியின் பெரிய பொறுப்பிலும் இவரது உறவினர்கள் இருந்தனர். அப்போது நடந்த சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னை உலககோப்பையில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.” என்று கடுமையாக சாடினார்.

இதற்கு அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் பதில் கூறியதாவது: “பொதுவாக தேர்வுகுழு அணியின் தலைவராக இருக்கும் நான் மட்டும் தேர்வுகுழுவில் இல்லை. மொத்தம் ஐந்து பேர் இருப்பர். அத்துடன் கேப்டனுடன் வினவிய பிறகு அணிகளையும் முடிவு செய்வோம். இப்படி இருக்க ராயுடுவிற்கு இது ஏன் புரியவில்லை? நான் மட்டும் எடுக்கப்படும் முடிவுகள் இல்லை என்பதை அவரும் உணர்ந்திருப்பார். ஆனால் பழசை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன் என்று நினைக்கிறார். இந்த குற்றச்சாட்டு முறையானது அல்ல.” என்றார்.

- Advertisement -