“ஒரு போட்டி சரியா இல்லனா உடனே எங்களை மாத்த சொல்றாங்க.. இத சகிச்சிட்டு தான் விளையாடறோம்!” – முகமது சிராஜ் அதிரடியான பேட்டி!

0
4443
Siraj

நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக அபாரமான முறையில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று இருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேலை பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். மூவரும் சேர்ந்து மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்டத்தின் இரண்டாவது பகுதி 20 ஓவர்கள் முடிவதற்குள் முடிந்து விட்டது.

- Advertisement -

ஆசியக் கோப்பையில் மிகச்சிறந்த பார்மில் இருந்த முகமது சிராஜ் திடீரென உலக கோப்பையில் அதை கொஞ்சம் தவற விட்டார். இந்த நிலையில் அவருடைய இடத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வெளியில் இருந்து நிறைய குரல்கள் வந்தன.

இப்படியான நிலையில் நேற்று மிகச் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு சிறப்பான அடித்தளத்தை பந்துவீச்சில் ஏற்படுத்தினார். இதற்கு அடுத்து வந்த முகமது சமி அதை மிகச் சரியாக பயன்படுத்தி முடித்தார்.

இதுகுறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது “விக்கெட் எடுப்பது முக்கியம் ஆனால் ரிதத்தில் இருப்பது அதைவிட முக்கியம். கடந்த இரண்டு மூன்று போட்டிகளில் நான் சில நேரம் ரிதத்தில் இருந்தேன் சில நேரம் இல்லை.

- Advertisement -

எடுக்கப்பட்ட விக்கெட்டுகளின் அடிப்படையில் என்னை நான் மதிப்பிடுவது கிடையாது. நான் எவ்வளவு ரிதத்தில் இருந்தேன் சரியான இடங்களில் பந்து வீசினேன் என்பதுதான் என்னைப் பற்றி என் மதிப்பீடு.

நாங்கள் நன்றாக செயல்படும்போது காம்பினேஷன் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். அதுவே ஏதாவது ஒரு போட்டியில் தவறும் பொழுது உடனே வீரர்களை மாற்ற வேண்டும் என்கிறார்கள்.

ஒரே ஒரு போட்டியில் முன்வைத்து வீரர்களின் கலவையை மாற்ற வேண்டும் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த எல்லா எதிர்மறையான விஷயங்களையும் வெளியில் வைத்து விட்டதால் நாங்கள் நேர்மறையாக உள்ளே சென்று விளையாடுகிறோம்.

எங்கள் வேகப் பந்துவீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. என்னால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் முகமது சமி உள்ளே சென்று விக்கெட் எடுக்கிறார். இல்லை பும்ரா பாய் விக்கெட் எடுக்கிறார். நாங்கள் எப்பொழுதும் ஒரு ஆடுகளத்திற்கு எது தேவையோ அது குறித்து பேசி முடிவு செய்து வேலை செய்கிறோம்! என்று கூறியிருக்கிறார்!