“நான் சொல்றேன்.. உலகத்தில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் கேஎல் ராகுலும் முக்கியமானவர்தான்!” – தினேஷ் கார்த்திக் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
460
Rahul

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அசாத்திய திறமையுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோல்வி அடையாத அணியாக இந்தியா இருந்து வருகிறது.

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து திரும்பிய பொழுது, அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்தான சந்தேகம் இருந்தது. மேலும் மிக முக்கியமாக கேஎல் ராகுல் உடல் தகுதி மீது பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் காயத்தில் இருந்து திரும்பிய இந்திய வீரர்கள் அனைவரும் ஒரே அணியாக சேர்ந்து, இதுவரை அவர்கள் செயல்பட்டதை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதில் கே எல் ராகுலின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவரை ஒரு பேட்ஸ்மேன் ஆக எல்லோருக்கும் தெரியும். ஆனால் பேக்கப் விக்கெட் கீப்பராக இருந்தவர், தற்பொழுது முதன்மை விக்கெட் கீப்பர்கள் செயல்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் எடுத்த சில கேட்ச்கள் மறக்க முடியாதவை மற்றும் அபாரமானவை.

இது குறித்து இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஓடும் பொழுது “அவர் பிடிக்கின்ற கேட்சுகள் பெரும்பாலும் அவருக்கான எதிர் திசையில் இருக்கிறது. பந்து எவ்வளவு தாழ்வாக இருந்தாலும் அவரால் பந்தை எடுக்கப்படுகிறது. நேற்றைய ஆட்டம் மட்டும் என்று கிடையாது. அவர் இந்த தொடர் முழுக்க மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணியின் எட்வார்ட்ஸ் மற்றும் இந்தியாவின் கேஎல்.ராகுல் இருவரும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களாக இருந்திருக்கிறார்கள். இது நீங்கள் கேஎல்.ராகுலிடம் எதிர்பார்த்த ஒன்று கிடையாது.

கேஎல் ராகுல் பேட்டிங் இருக்கு பெயர் பெற்றவர். ஆனால் அவர் இந்த முறை அற்புதமாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரது விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருப்பது அவரது பேட்டிங்களும் வெளிப்படுகிறது. பெரிய தருணங்கள் வந்த பொழுது அவர் எழுந்து வந்திருக்கிறார். இது ஒரு தரமான வீரரின் அடையாளம்!” என்று கூறி இருக்கிறார்!