ஐபிஎல் விட பிக் பாஷ் தொடரை பார்க்கவே விரும்புகிறேன் – பாபர் ஆஸம் பேச்சு!

0
321
Babar Azam

உலகின் நம்பர் ஒன் பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக் ஆன இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் இறுதி 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது!

வீரர்களுக்கான சம்பளம், பயிற்சி, பாதுகாப்பு, உணவு, தங்கும் வசதிகள் என்றும், போட்டி, மைதானம், ஒளிபரப்பு தரம் என்றும் ஐபிஎல் தொடர் ஐசிசி போட்டிகளை விட அடுத்த நிலைக்கு சென்று உலகெங்கும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறது!

- Advertisement -

இதைத் தாண்டி வியாபாரம் என்று எடுத்துக் கொண்டால் மற்ற கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் எந்த ஒரு கிரிக்கெட் லீக்குக்கும் இல்லாத வருமானம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடருக்கு உண்டு. ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களை விட பெரிய தொடர் ஐபிஎல் தொடர்தான்!

தற்பொழுது பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் டி20 தொடரில் கராச்சி கிங்ஸ் அணியில் இருந்து பெசாவர் சல்மி அணியில் இடம் பெற்று விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமிடம், பெசாவர் சல்மி அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பார்க்க விரும்பும் டி20 கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவின் ஐபிஎல் தொடரா இல்லை ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரா என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம், ஐபிஎல் தொடரை விட பிக்பாஷ் தொடரை பார்க்கவே தான் விரும்புவதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது தொடர்பாக பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் சிறந்த கிரிக்கெட் காட்சியாக இருந்தது. மேலும் மைதானங்கள் நிரம்பி காணப்பட்டது. ஐபிஎல் தொடருக்கு பிறகு இதுவே இரண்டாவது சிறந்த டி20 லீக் தொடராக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தற்பொழுது இரண்டாவது இடத்தில் தற்செயலாக இப்பொழுதும் பாகிஸ்தானின் பி எஸ் எல் தொடர் இருக்கிறது. பிபிஎல் மற்றும் சிபிஎல் டி20 லீக்குகள் இவைகளை விட பின்தங்கி இருக்கின்றன என்று கூறி இருக்கிறார்!

சிறிது நாட்களுக்கு முன்பு பேசிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி உலகின் தரமான வேகப்பந்து வீச்சு டி20 லீக் தங்கள் நாடு நடத்தும் பிஎஸ்எல் லீக்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.