இந்தியா பாகிஸ்தான் போட்டியில் விளையாடிய ஐசிசியின் புதிய விதி!

0
250
Indvspak

கிரிக்கெட் உலகில் சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் அது நேற்று ஆசிய கோப்பையில் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஆகத்தான் இருக்கும்!

இதில் பங்கு பெற்ற அணிகள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்த தொடரை ஒரு ஒத்திகையாக பயன்படுத்த நினைத்தனர். அதேபோல் ஆசிய அணிகள் எவ்வாறு தயாராகி இருக்கின்றன என்று உலக கிரிக்கெட் நாடுகள் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

- Advertisement -

மேலும் சமகாலத்தில் மிகச் சிறந்த வீரர்களாக ஒப்பிடப்படும் விராட் கோலி பாபர் அஸம் இருவரும் நேருக்கு நேர் மோத இருந்தார்கள். அடுத்து இந்தியர் ரன் மெஷின் விராட் கோலி ஒரு நீண்ட ஓய்விற்குப் பிறகு வந்து தான் இழந்த பேட்டிங் பார் மீட்பார் என்ற கேள்வியும் இந்த போட்டிக்கு இருந்தது. இத்தோடு இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே அதற்கு எப்போதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். இத்தோடு சேர்த்து பலகாரணங்கள் சூழவும் நேற்றைய போட்டி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய போட்டியாக மாறியது.

துவங்க படுவதற்கு முன்பே மிகப்பெரிய போட்டியாக இருந்த இப்போட்டி தரமான ஆடுகளம் அமைந்து கடைசி ஓவர் வரை வெற்றி யாருக்கு என்று தெரியாத அளவில் சென்றதால் மொத்த கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த போட்டிகளில் ஒரு போட்டியாக இந்த போட்டி மாறியது.

நேற்றைய போட்டியில் பந்து வீச்சு பேட்டிங் பீல்டிங் என பல சுவாரசியங்கள் இருந்தாலும், போட்டி மிகப் பரபரப்பாக நடந்து இருந்தாலும், ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு சுவாரசியமான விஷயம் இந்த போட்டிக்கு உள்ளே இருந்தது. அந்த சுவராசியம் எதனால் என்றால் ஐசிசி சமீபத்தில் ஒரு விதியைக் கொண்டு வந்திருந்தது அந்த விதி தான் வெளியில் யாருக்கும் தெரியாத ஒரு சுவாரசியத்தை போட்டிக்குள் வைத்திருந்தது.

- Advertisement -

அது என்ன விதி என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 18 ஓவர்களை ஒரு அணி வீசி இருக்க வேண்டும், அப்படி பேசவில்லை என்றால் மீதம் இருக்கும் ஓவர்களுக்கு, உன் வட்டத்திற்கு வெளியே இருக்கும் ஐந்து பீல்டர்களில் ஒரு பீல்டர் உள் வட்டத்திற்குள் வரவேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் தாக்கி விளையாடுவதற்கு வசதியாக போய்விடும். குறித்த நேரத்தில் இரு அணிகளுமே பந்துவீசி முடிக்க இப்படியான ஒரு விதியை ஐசிசி சமீபத்தில் கொண்டுவந்தது. இந்த விதி நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்திய அணி குறித்த நேரத்தில் 18 ஓவர்களை வீச முடியாத காரணத்தால், கடைசி இரண்டு ஓவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு பீல்டர் உள்ளே வந்து நிற்க வேண்டியதாக இருந்தது. இந்திய அணி செய்த அதே தவறை நேற்று பந்துவீசும் போது பாகிஸ்தான் அணியில் செய்தது. அந்த அணி குறித்த நேரத்தில் 18 ஓவர்களை வீசி முடிக்காத காரணத்தால், கடைசி மூன்று அவர்களுக்கு வெளி வட்டத்தில் இருந்த ஒரு ஃபில்டர் உள்வட்டத்தில் வந்து நிற்க வேண்டியதாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு ஒரு பாதிப்பை உருவாக்கி விட்டது. கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி 32 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இது இந்த ஆட்டத்திற்கு இருந்த ஒரு முக்கியமான விஷயம் ஆகும் இது நிறைய ரசிகர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது!