ஸ்பின்னர்ஸ் வச்சு ஏமாத்திட்டு இருந்த பழைய இந்தியா கிடையாது; இது இந்தியா 2.0 – தென்னாபிரிக்கா ஜாம்பவான் கருத்து!

0
20757

‘இந்திய அணி என்றாலே ஸ்பின்னர்கள் தான் என்று இருந்த நிலைமை மாறி, தற்போது தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கே வந்துவிட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி வேறு மாதிரியாக இருக்கிறது.’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தென் ஆப்பிரிக்கா அணையில் ஜாம்பவான் லேன்ஸ் க்ளூஸ்னர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வருகிற ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதுகின்றன. போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இதற்காக ஆஸ்திரேலிய அணி கடந்த வாரமே லண்டன் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய அணியில் சிலர் முன்னமே சென்றுவிட்டனர். மேலும் சிலர் ஐபிஎல் பிளே-ஆப் போட்டிகள் முடிவடைந்த பிறகு சென்றுள்ளனர்.

கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்ற இந்திய அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இம்முறை மீண்டும் பைனலுக்குள் வந்திருக்கிறது. பலம் மிக்க ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.

இரண்டு அணிகளும் டாப் என்பதால், யார் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எழுந்து வருகிறது. இது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள், விமர்சனர்கள் என பலரும் முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தென்னாபிரிக்கா அணியின் ஜாம்பவான் லேன்ஸ் க்ளூஸ்னர், இந்திய அணியின் பலம் என்ன? கடந்த வருடங்களை விட இப்போது எந்த வகையில் இந்தியா பலமாக இருக்கிறது? ஆகியவை பற்றி தனது பேட்டியில் பேசியுள்ளார்.

“காலம் காலமாக இந்திய அணியின் பலம் அவர்களது ஸ்பின்னர்கள் தான். ஆனால் இம்முறை எந்த பிட்ச்சிலும் அட்டாக் செய்யும் அளவிற்கு அவர்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துவிட்டனர். இதன் காரணமாக தான் அடுத்தடுத்து 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியினால் முன்னேற முடிந்துள்ளது. உலகத்தரம் மிக்க வேகப்பந்து வீச்சாளர்களை தங்களது அணியில் கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் இந்திய அணியை எதிர்கொள்வதற்கு பச்சை பசேல் என்கிற பிட்ச்சை தயார் செய்து அதில் விளையாடுவார். அப்போதுதான் ஸ்பின்னர்களுக்கு எடுபடாது. ஆனால் இப்போது அது போன்று செய்ய இயலாது. அந்த பிட்சில் அட்டாக் செய்யும் அளவிற்கு பந்துவீச்சாளர்கள் வந்துவிட்டனர். ஸ்பின்னர்கள் கூட அந்த பிட்ச்சில் அட்டாக் செய்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்னும் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும். இருவரில் யார் வெல்கிறார் என்பதை பொறுத்து தான் வெற்றி தோல்வி அமையும்.” என்றார்.