ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் 339 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கேப்டன் அலிசா ஹெலி ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன போபே லிச்சிஃபீல்டு 93 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார். மற்றொரு நட்சத்திர வீரங்களையும் முன்னாள் கேப்டனுமான எலிசா பெர்ரீ 88 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதைப்போன்று நடுவரிசையில் ஆஸ்லீக் கார்ட்னர் 45 பந்துகளில் 63 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவரில் 338 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வெற்றி:
ஆஸ்திரேலிய அணி கூடுதலாக இன்னும் 20, 30 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் இந்திய வீராங்கனைகள் கடைசி கட்டத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இதன் அடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனை செபாலி வர்மா 10 ரன்களிலும், மந்தனா 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதன் அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரித், ஜெமிமா ஆகியோர் அபாரமாக அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். முக்கியமான கட்டத்தில் ஹர்மன்பிரித் கவுர் 89 ரன்களில் ஆட்டம் இழக்க தீப்தி சர்மா 26 ரன்களும், ரிச்சா கவுஸ் 26 ரன்களும் எடுத்தனர்.
சாதனை பட்டியல்:
எனினும் மறுமுனையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஜெமிமா ரூட்ரிக்யுஸ் 134 பந்துகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 48.3 ஓவரில் ஐந்து விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இது சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை இந்திய அணி வெற்றிகரமாக துரத்திய அதிகபட்ச ஸ்கோர் என்றால் இதுதான்.
இதையும் படிங்க: அக். 31ஆம் தேதி சம்பவம் இருக்கு.. இந்த 3 இந்திய வீரர்களை கவனீங்க.. வாய்ப்பு கொடுப்பாரா அகர்கர்
இதற்கு முன்பு இதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 265 ரன்கள் துரத்தியதே அதிகபட்ச சேஸிங் ஸ்கோர் ஆக இருந்தது. இதேபோன்று உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக எட்டப்பட்டது இதுதான் முதல் முறையாகும். இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் உலகக்கோப்பை வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி கடந்து 2022 உலக கோப்பையில் சேர்த்து தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற நிலையில் தற்போது அந்த பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.






