உலக கோப்பையை நடத்துவது ஐசிசியா? பிசிசிஐயா?.. நாளைக்கு தெரியும்.. காரணம் இதுதான்! – முகமது ஹபீஸ் ஆதாரத்துடன் அதிரடி!

0
1692
Hafiz

இதுவரை இந்திய அணி சென்னை மற்றும் டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

மேலும் இந்த இரண்டு மைதானங்களிலும் இரண்டு போட்டிகள் நடந்திருக்கிறது. டெல்லியில் இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. தற்பொழுது சென்னையில் நியூசிலாந்து பங்களாதேஷ் நிகழ்ச்சியில் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா மோதிய போட்டிக்கு வழங்கப்பட்ட ஆடுகளம், இலங்கை தென் ஆப்பிரிக்கா அணிக்கு வழங்கப்பட்ட அதே ஆடுகளம் போல் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஒன்றாக இருந்தது.

இந்தியா சென்னையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய போது கொடுக்கப்பட்ட ஆடுகளம் சுழற் பந்துவீச்சிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நியூசிலாந்து பங்களாதேஷ் மோதிக் கொள்ளும் போட்டியில் வழங்கப்பட்டுள்ள சென்னை ஆடுகளம் இப்படி கிடையாது.

நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் அகமதாபாத் ஆடுகளத்தில் உலகக் கோப்பை துவக்க போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் விளையாடின. அந்தப் போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக இருந்தது.

- Advertisement -

எனவே நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டி பேட்டிங் செய்த சாதகமாக இல்லை என்றால், பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது என்றால், இந்தியாவுக்கு ஐசிசி வேலை செய்கிறது என்று அர்த்தம் என்பதாக முகமது ஹபீஸ் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா இல்லை பிசிசிஐ நடத்துகிறதா என்பது நாளை தெரியும். இதுவரை ஹைதராபாத், டெல்லி, தரம்சாலா ஆகிய மைதானங்களில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆடுகளத்திலும் இரண்டு போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமைக்கப்பட்ட ஆடுகளம் போல் இல்லாமல் இருந்தால் யார் நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதில் யாருடைய தாக்கமும் இருக்கக் கூடாது. ஐசிசி சொல்கின்ற படி ஆடுகள அமைப்பாளர்கள் செயல்பட வேண்டும். நாளை ஆடுகளம் எப்படி அமைக்கப்படுகிறது என்பதை பொறுத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் நாளை வேறு ஏதாவது மாற்றங்கள் இருந்தால் இது ஒரு பெரிய கேள்விக்குறி!” என்று கூறியிருக்கிறார்!