ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்.. ஜெய்ஸ்வால் எதிர்பார்க்காத உயர்வு.. இந்திய வீரர்கள் மீண்டும் ஆதிக்கம்

0
298
Jaiswal

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி தற்பொழுது இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இங்கிலாந்து அணியின் இந்த சுற்றுப்பயணம் அவர்களுக்கு முதல் போட்டியில் வெற்றிகரமாகவே ஆரம்பித்தது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையில் திரும்பி வந்த இளம் இந்திய அணி அபாரமான முறையில் விளையாடி இரண்டு போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் போப் மற்றும் பென் டக்கெட் இருவரும் ஒரு சதம் அடித்திருக்க, தொடக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்டுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி இங்கிலாந்தின் பந்துவீச்சு அமையவில்லை.

அதே சமயத்தில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள், கில், ரோகித் சர்மா, மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு சதங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்திய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் அனைவருமே குறிப்பிடத்தக்க வகையில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். மிகக்குறிப்பாகும் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததின் மூலமாக, ஐசிசி தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி, 699 புள்ளிகள் உடன் 15ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இது அவருக்கு தரவரிசையில் நல்ல முன்னேற்றமாக முதல்முறையாக அமைந்திருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பண்ட் 706 புள்ளிகள் உடன் 14 வது இடத்திலும், கடந்த டெஸ்டில் சதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா 731 புள்ளிகள் உடன் 12வது இடத்திலும் இருக்கிறார்கள்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே 752 புள்ளிகள் எடுத்து ஏழாவது இடத்தில் இருக்கிறார். ஆனாலும் ரோகித், கில் மற்றும் ஜெயஸ்வால் மூன்று பேரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் வெகு எளிதாக முதல் 10 இடங்களுக்குள் வந்துவிட முடியும். எனவே மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க : AUSvsNZ.. 3 பந்து 12ரன்..10 பந்தில் ஆட்டத்தை மாற்றிய மும்பை டிம் டேவிட்.. சிஎஸ்கே ஜோடி ஆட்டம் வீண்

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் :

கேன் வில்லியம்சன்-893
ஸ்டீவ் ஸ்மித்-818
டேரில் மிட்செல்-780
பாபர் அசாம்-768
ஜோ ரூட்-766
உஸ்மான் கவாஜா-765
விராட் கோலி-752
திமுத் கருணாரத்ன-750
ஹாரி புரூக்-750
மார்னஸ் லபுஷேன்-746