டி20 உலககோப்பை தொடர்.. பயிற்சி ஆட்டம் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி.. நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்தியா

0
676
Indian team


2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணியை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற தங்களது அணியை அறிவித்துள்ளனர். இந்தியா இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவை தவிர மற்ற 15 அணிகளும், ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடும். தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் அக்டோபர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும். இதே போன்று சூப்பர் 6 சுற்றில் விளையாடும் அணிகள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதி நடைபெறும். இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும்.
அதன் படி அக்டோபர் 10ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் , யூ.ஏ.இ அணிகள் மோதுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி ஸ்காட்லாந்து , நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி இலங்கையும், ஜிம்பாப்வே அணியும் களம் காண்கின்றனர். அக்டோபர் 11 ஆம் தேதி நமிபியா , அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது.

அக்டோபர் 13ஆம் தேதி ஜிம்பாப்வே , நமிபியா அணிகள் மோதுகிறது. அக்டோபர் 13ஆம் தேதி இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தப்படுகிறது. அக்டோபர் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ அணிகள் விளையாடுகின்றன. அக்டோபர் 17ஆம் தேதி இந்தியா , நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அக்டோபர் 17ஆம் தேதி நியூசிலாந்து , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

அக்டோபர் 17ஆம் தேதி இங்கிலாந்தும், பாகிஸ்தானும், அக்டோபர் 17ஆம் தேதி ஆப்கானிஸ்தான் , வங்கதேசம் அணிகளும் மோதுகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் களம் காண்கின்றன. அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசம் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. 2011ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் போது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொண்ட குறிப்பிடத்தக்கது.