“ஐசிசி பிசிசிஐ மாதிரி பண்ணனும்.. இல்லனா டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாத்த முடியாது” – அஷ்வின் பேட்டி!

0
49
Ashwin

கிரிக்கெட் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூன்று வடிவங்களில் ஐசிசியால் நடத்தப்படுகிறது. ஆனாலும் கிரிக்கெட்டின் நிஜமான சவால்கள் அடங்கிய வடிவமாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது.

ஆனாலும் கூட இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மட்டும் தான் லாபத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. இவர்கள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குதான் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி உரிமம் சார்ந்தும் வருமானம் வருகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்த பெரிய அணிகளான நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிய வருமானம் ஏதும் இல்லை. மொத்தமே மூன்று நாடுகள் மட்டுமேடெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால், நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியாது என்றால் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியாது.

தற்பொழுது நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களை இரண்டு போட்டிகளாக குறைக்க ஆரம்பித்து விட்டன. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவுக்கு மிக வேகமாக வழிவகுக்கும்.

இன்னும் தாண்டி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவின் டி20 லீக் தொடர் ஆரம்பிக்க இருப்பதால், தென் ஆப்பிரிக்கா முக்கிய வீரர்கள் அந்தத் தொடரில் விளையாடுகிறார்கள். எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புதிய வீரர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியை நியூசிலாந்துக்கு அனுப்புவது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐசிசி காப்பாற்றுவது குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் “ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என ஒரு நிதியை ஒதுக்க வேண்டும். அந்த நிதியை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு இல்லாத நாடுகள் விளையாடும் போட்டிக்கு பயன்படுத்த வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒதுக்குகிறது. இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு பலப்படுத்தப்படுகிறது. இதுபோலவே ஐசிசி தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என ஒதுக்க வேண்டும். அப்பொழுதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும்!” என்று கூறியிருக்கிறார்!