அடுத்த 10 வருடங்களில் ஆண்டுக்கு ஒரு ஐசிசி தொடர் – 4 கோப்பைகளை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு

0
821
ICC Events for Next 10 Years

இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை முடித்து விட்டு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தயாராகி வருகிறது. புதிய டி20 கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து பங்கேற்கப் போகும் முதல் தொடர் இதுவாகும். இந்த உலகக் கோப்பையை மோசமான நினைவுகளோடு இந்திய ரசிகர்கள் கடந்தாலும் அடுத்த ஆண்டே இன்று நினைவுகளை மாற்ற அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்க இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே ஐசிசி வாரியம் அறிவித்திருந்தது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கவிருக்கும் ஐசிசி தொடர்கள் பற்றிய அறிவிப்பையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025ல் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று சில நாடுகள் விளையாட மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் ஐசிசி தொடரை அந்த நாட்டில் வைத்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2027 ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் நமீபியா நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

- Advertisement -

2022 டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து நடத்துகிறது. மீண்டும் 2029 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா நடத்துகிறது. 2030ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் 2031 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

இவற்றுள் 2023 உலகக் கோப்பை, 2026 டி20 உலக கோப்பை, 2029 சம்பியன்ஸ் டிராபி, 2031 50 ஓவர் உலகக்கோப்பை என நான்கு தொடர்கள் இந்திய நாட்டில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இனிமேல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரும் மீண்டும் நடக்க இருப்பதால் அதையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்