642 பந்தில் முடிந்த டெஸ்ட்.. முதன் முதலில் மௌனம் கலைத்த ஐசிசி.. தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு

0
243

கடந்த சில நாட்களாக நியூலாண்ட்ஸ் பிட்ச் குறித்த விவாதங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கேப்டவுன் மைதானத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்ற போது, அதன்பின் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ் எய்டன் மார்க்ரமிம் அபார சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது.

- Advertisement -

வெறும் 1.5 நாட்கள் கூட முழுமையாக டெஸ்ட் போட்டி நடக்காததால், இந்திய ரசிகர்கள் மத்தியில் பிட்ச் குறித்த விவாதங்கள் எழுந்தன. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தரப்பில், இதுபோன்ற பிட்ச்களில் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்திய பிட்சில் இதுபோல் நடந்தால் அனைவரும் வாயை முடிக் கொண்டு இருக்க வேண்டும்.

உங்களை நீங்களே சவாலில் தள்ளி கொண்டு தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறீர்கள். அதுபோல் இந்த பிட்ச் நிச்சயம் அபாயகரமான ஒன்று தான். ஒருவேளை இந்தியாவில் பிட்சில் கொஞ்சம் டர்ன் இருந்தாலும், உடனடியாக கமெண்ட் செய்வார்கள். கேப் டவுன் பிட்சில் கூட அவ்வளவு வெடிப்புகள் உள்ளது. அதனை பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்று விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து பிட்ச் குறித்து ஆட்ட நடுவர் என்ன சான்றிதழ் அளித்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் கேப் டவுன் பிட்ச் குறித்த சான்றிதழை ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட் அளித்துள்ளார். அதில், கேப் டவுன் பிட்சில் பேட்டிங் செய்வது சவால் நிறைந்த ஒன்றாகும். அபாயகரமான பவுன்ஸ் ஆட்டம் முழுவதும் இருந்தது. அதன் காரணமாகவே பேட்ஸ்மேன்கள் ஷாட் அடிக்க கடினமாக அமைந்தது.

- Advertisement -

பேட்ஸ்மேன்களின் கிளவுஸில் அதிக பந்துகள் அடித்துள்ளன. அதேபோல் சீரற்ற பவுன்ஸ் காரணமாக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கேப் டவுன் மைதானத்தின் பிட்ச் திருப்தியில்லை என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேப் டவுன் மைதானத்திற்கு ஒரு எதிர்மறை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது

ஒரு மைதானத்திற்கு 6 எதிர்மறை புள்ளிகள் வழங்கப்பட்டால், அந்த மைதானத்தில் ஓராண்டுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் நடத்த அனுமதியளிக்கப்படாது. ஒருவேளை 12 புள்ளிகள் வழங்கப்பட்டால், 2 ஆண்டுகளுக்கு போட்டிகள் நடத்த ஐசிசி அனுமதிக்காது. இந்த எதிர்மறை புள்ளிகளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.