ஐசிசி ODI உலக அணி.. ரோகித் கேப்டன்.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்.. முக்கிய வீரருக்கு இடமில்லை

0
343
Rohit

2023 கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை வைத்து, ஒருநாள் கிரிக்கெட் உலக அணியை ஐசிசி அறிவித்திருக்கிறது.

நேற்று இதே போல் கடந்த ஆண்டுக்கான டி20 உலக அணியை ஐசிசி அறிவித்தது. அந்த அணிக்கு இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருந்தார். மேலும் மூன்று இந்திய வீரர்களுக்கு அந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதே போல் இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக அணிக்கு ஐசிசி ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்திருக்கிறது. அத்தோடு மொத்தமாக ஆறு வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அறிவிக்கப்பட்ட இந்த அணிக்கு ரோகித் சர்மா துவக்க வீரராகவும் கேப்டனாகவும் வருகிறார். மற்றும் ஒரு துவக்க வீரராக கடந்த ஆண்டு முதல் மிகச் சிறப்பாக செயல்பட்ட கில் இருக்கிறார். மூன்றாவது வீரராக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் விராட் கோலி இடத்துக்கு வர, விராட் கோலி நான்காவது வீரராக இருக்கிறார்.

இந்த அணியில் விக்கெட் கீப்பராக தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசன், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அதே அணியின் மார்க்கோ யான்சன், சுழற் பந்துவீச்சாளர்களாக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா மற்றும் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

காயத்தின் காரணமாக கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து விளையாட முடியாமல் இருந்த பும்ராவுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இருந்து இரண்டு வீரர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக இந்திய அணி செயல்பட்டு இருக்கிறது, ஆனால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மட்டும் வெல்ல முடியாமல் போயிருக்கிறது என்பதை ஐசிசி-யின் அறிவிப்பு உணர்த்துகிறது.

ஐசிசி அறிவித்திருக்கும் உலக ஒரு நாள் கிரிக்கெட் அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசன் (வி. கீ), மார்க்கோ யான்சன், ஆடம் ஜம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி.