ஐசிசி ODI ரேங்க்.. 2018க்கு பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை.. கில் புதிய சரித்திரம்.. மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

0
1249
Gill

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. நடைபெற்று வரும் எல்லா விஷயங்களும் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது!

ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி குறித்து பெரும்பாலும் அவநம்பிக்கையே நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் பெரிய சிக்கல்களை சந்தித்தது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில், இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மிக அபாரமாக செயல்பட்டு 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைந்தது.

இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், இந்திய அணி 213 ரன்களுக்கு சுருண்ட போதும், அடுத்து பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை 172 ரன்கள் அவுட் செய்து அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். இளம் வீரர் சுப்மன் கில் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். பேட்டிங்கில் கீழ் வரிசையில் இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு அரை சதங்கள் அடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியில் இருந்து இரண்டு சதங்கள் வந்திருக்கிறது. விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்த இரு சதங்களையும் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் இன்று ஐசிசி அறிவித்துள்ள, ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான இடங்களை பிடித்து இருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மூவர் முதல் 10 இடங்களில் இருந்தார்கள். தற்பொழுது மீண்டும் மூன்று இந்திய வீரர்கள் அதற்குப் பிறகு, முதல் 10 இடங்களில் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 759 புள்ளிகள் உடன் இரண்டாம் இடம் பிடித்து, தனது கிரிக்கெட் வாழ்வில் மிக அதிகபட்ச இடத்தை தற்பொழுது பெற்றிருக்கிறார். விராட் கோலி ஏழாம் இடத்தில் தொடர்கிறார். ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். இதே போல் பாகிஸ்தான் அணியின் மூன்று வீரர்கள் முதல் பத்து இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் பட்டியல

பாபர் ஆஸம் 863
சுப்மன் கில் 759
ராஸ்ஸி வான் டெர் டுசென் 745
டேவிட் வார்னர் 739
இமாம்-உல்-ஹக் 735
ஹாரி டெக்டர் 726
குயின்டன் டி காக் 721
விராட் கோலி 715
ரோஹித் சர்மா 707
ஃபகார் ஜமான் 705