ஐசிசி ODI ரேங்க்.. பாபர் அசாம் சரிவு.. ரோகித் உயர்வு.. பந்துவீச்சில் சிராஜ் குல்தீப் அசத்தல்.. மாறிய கள நிலவரங்கள்.. முழு விவரம்!

0
2920
Rohit

இந்தியாவில் தற்பொழுது 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அதே சமயத்தில் சிறிய அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் செயல்பாடு ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் எதிர்பார்த்தபடியே இந்திய அணியின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் செயல்பாடும் இந்திய சூழ்நிலையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணி வீரர்களின் செயல்பாடும் ஐசிசி தரவரிசை பட்டியலில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கி வருகிறது. இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

தற்பொழுது ஐசிசி ஒருநாள் தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் அவருடைய புள்ளிகள் 829 என்று குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் 823 புள்ளிகள் உடன் இந்திய வீரர் சுப்மன் கில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒரு சிறந்த செயல்பாடு கில்லை முதல் இடத்துக்கு கொண்டு சென்று விடும்.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரும் 769 மற்றும் 756 புள்ளிகள் எடுத்து மூன்று மற்றும் நான்காம் இடத்தில் இருக்கிறார்கள்.

டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இருவரும் தலா 747 புள்ளிகள் எடுத்து ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் நீடிக்கிறார்கள். இதில் ஒரு இடம் விராட் கோலிக்கு சரிவு ஏற்பட்டு இருக்கிறது. டேவிட் வார்னருக்கு இரண்டு இடங்கள் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக போட்டிகள் இல்லாத அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 729 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

ஒரு இடம் முன்னேறி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 725 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறார். நான்கு இடங்கள் சரிந்து தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான்டர் டேசன் 716 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் 706 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 670 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டு புள்ளிகள் பின்தங்கி 668 புள்ளிகள் உடன் முகமது சிராஜ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் மற்றுமொரு பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 632 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். காயத்தில் இருந்து திரும்ப வந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 622 புள்ளிகள் உடன் 13வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!