இந்திய அணிக்கு எதிராக 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வெற்றிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் இலங்கை அணி இங்கிலாந்து அணி பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருக்கிறது.
இரண்டு முறை உலக கோப்பைகளை வென்றிருந்த போதிலும் கூட இலங்கை அணிக்கு கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக மிகவும் மோசமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு சரிந்த காரணத்தினால், தேசிய கிரிக்கெட் அணிக்கு சிறந்த வீரர்களும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாடி வந்த இலங்கை அணி, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் தோற்று வெளியேறியது.
இதன் காரணமாக இந்திய தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு நீண்ட காலமாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த இங்கிலாந்தின் சில்வர் வுட் விலகினார். இந்த நிலையில் இடைக்கால பயிற்சியாளராகச் சனத் ஜெயசூர்யா கொண்டுவரப்பட்டார். புதிய கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டார். இப்படியான நிலையில்தான் இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இலங்கை அணி ஏழாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து அணி தற்பொழுது ஆறாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் அப்படியே தொடர்கின்றன.
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்: பிசிசிஐ வச்ச செம ட்விஸ்ட்.. மீண்டும் திரும்பிய டிராவிட் காலம்.. கேப்டன் ரோகித்துக்கு நல்ல வாய்ப்பு
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை :
இந்தியா – 118
ஆஸ்திரேலியா – 116
சவுத் ஆப்பிரிக்கா – 112
பாகிஸ்தான் – 106
நியூசிலாந்து – 101
இங்கிலாந்து – 95
பங்களாதேஷ் – 93
ஆப்கானிஸ்தான் – 80
வெஸ்ட் இண்டீஸ் – 69