இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ஒரு பகல் இரவு போட்டியும் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய அணி விசேஷ பயிற்சி பெறுவதற்கான செய்திகள் வெளி வந்திருக்கிறது.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்திய அணி கைகளில் இருந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு சென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் எப்படியாவது இந்த முறை இந்திய அணியை தங்களது சொந்த நாட்டில் விழ்த்தி விடவேண்டும் என முடிவு செய்திருக்கிறது.
எனவே முதல் டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. இதன் மூலமாக தொடரின் ஆரம்பத்திலேயே எப்படியாவது முன்னிலை பெற்று விட வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டம் தீட்டியிருக்கிறது.
இந்திய அணி இதுவரையில் உள்நாட்டில் பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக பகல் இரவு டெஸ்ட் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது. முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் பகல் இரவு டெஸ்ட் விளையாடுகிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுவதற்காக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரையில் இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இறுதியாக ராகுல் டிராவிட் தலைமையில் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நிர்வாகமும் ஆஸ்திரேலியாவில் மீண்டும் தொடரை வெல்ல கடுமையான முயற்சிகளை செய்கிறது
இந்த சுற்றுப்பயணத்தில் பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் முடிந்ததும் இரண்டாவது நடக்கும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்காக இடையில் இரண்டு நாட்கள் இந்திய அணி பகல் இரவு பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முடிவெடுத்து இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்ட மாஸ்டர் பிளானுக்கு பிசிசிஐ சிறப்பான செக் வைத்திருக்கிறது. அத்தோடு கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு முறை டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய டீம் பண்றத.. தீக்சனா பச்சையா உடைச்சு சொல்லிட்டார்.. அது உண்மைதான் – அஸ்வின் ஒப்புதல்
இந்திய அணியின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் சுற்றுப்பயணத்தின் அட்டவணை:
முதல் டெஸ்ட் நவம்பர் 22-26: பெர்த் ஸ்டேடியம், பெர்த்
இரண்டாவது டெஸ்ட் | டிசம்பர் 6-10: அடிலெய்டு ஓவல், அடிலெய்டு ( பகல் இரவு)
மூன்றாவது டெஸ்ட் | டிசம்பர் 14-18: தி கப்பா, பிரிஸ்பேன்
நான்காவது டெஸ்ட் | டிசம்பர் 26-30: எம்சிஜி, மெல்போர்ன்
ஐந்தாவது டெஸ்ட் | ஜனவரி 3-7: எஸ்சிஜி, சிட்னி