ODI பேட்டிங் ரேங்கிங்.. பாபர் அசாமை நெருங்கிய கில்.. தெ. ஆ அபாரம்.. ஆஸி பின்னடைவு!

0
891

இந்தியாவில் 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், அடுத்த மாதம் துவக்கத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய அனைத்தும் முடிவடைந்த நிலையில் உள்ளது!

இந்த நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் நெதர்லாந்து அணியை தவிர, மற்ற ஒன்பது அணிகள், உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தன. தற்பொழுதும் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் ஆசிய அணிகளான, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என 5 அணிகள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றன.

இதேபோல தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா அணி அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் சந்தித்தது. இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அவர்களது மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்த்து விளையாடியது.

இதற்கு அடுத்து இந்த அணிகளில் சில அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத இருக்கின்றன. குறிப்பாக இந்தியா உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐசிஐசிஐ ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பெரிய அளவில் பேட்டிங்கில் செயல்படாத போதும் பாபர் அசாம் முதல் இடத்திற்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. அவர் பாபர் அசாமை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றிய, தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் மட்டுமே முதல் பத்து இடங்களில் இருக்கிறார். இது ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு பின்னடைவுதான். மேலும் பாகிஸ்தான் அணியில் மூன்று வீரர்கள் முதல் பத்து இடங்களில் இருந்தார்கள். தற்பொழுது இரண்டு வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். பகார் ஜமான் வெளியேறியிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை முதல் 10 இடங்கள்:

பாபர் அசாம் பாகிஸ்தான் 857 புள்ளிகள்
சுப்மன் கில் இந்தியா 814 புள்ளிகள்
ராஸி வான்டர்டேசன் தென் ஆப்பிரிக்கா 743 புள்ளிகள்
இமாம் உல் ஹக் பாகிஸ்தான் 728 புள்ளிகள்
ஹாரி டெக்டர் அயர்லாந்து 726 புள்ளிகள்
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 720 புள்ளிகள்
குயின்டன் டிகாக் தென் ஆப்பிரிக்கா 714 புள்ளிகள்
விராட் கோலி இந்தியா 708 புள்ளிகள்
ஹென்றி கிளாசன் தென் ஆப்பிரிக்கா 698 புள்ளிகள்
ரோகித் சர்மா இந்தியா 696 புள்ளிகள்