“மொயின் அலி செஞ்ச வேண்டாத வேலை” .. “ஐசிசி கொடுத்த பெரிய தண்டனை”.. நடந்தது என்ன?

0
5067

அஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 393 ரண்களுக்கு ஏட்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது .

இதனைத் தொடர்ந்து தன்னுடைய முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் முதலில் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணியை விட ஏழு ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது .

- Advertisement -

முன்னதாக ஐந்து விக்கெட்டுகள் இழப்புடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா வேகமாக ஆடி ரண்களை குவித்தது. நேற்று சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 141 ரண்களில் ஆட்டம் இழக்க 371 ரண்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த 15 ரன்களில் மீதி நான்கு விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ராபின்சன் தலா மூன்று விக்கெட்டுகளையும் மொயின் அலி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த ஸ்போக்ஸ் மற்றும் அண்டர்சன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதலில் இன்னிங்ஸில் ஏழு ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது . இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஐசிசி விதிமுறைகளை மீறியதால் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு 25 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது ஐசிசி .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸில் 89 ஆவது ஓவரின் போது மொயின் அலி தன்னுடைய பந்து வீசும் விரல்களில் கிரீம் ஒன்றை தடவி இருந்தார். இது ஐசிசி போட்டி நடுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . இது பற்றி விசாரணை செய்த ஐசிசி யின் போட்டி நடுவர் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் .

இந்த விசாரணையின் போது தன்னுடைய விரல்களை உலர வைப்பதற்காக கிரீம் அப்ளை செய்ததாக மொயின் அலி தெரிவித்திருந்தார் . மேலும் ஐசிசி யின் விதிமுறைப்படி இது தவறு இல்லை என்றாலும் இந்த க்ரீம் அப்ளை செய்வதற்கு முன்பாக அவர் போட்டி நடுவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும் . ஆனால் மொயின் அலி அவ்வாறு செய்யவில்லை இது ஐசிசி யின் வீரர்களின் நடத்தை பற்றிய விதி 2.20,ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் . இதன் காரணமாகத்தான் ஒயின் அலிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது .

மேலும் அவர் பயன்படுத்திய கிரீமின் தன்மை பற்றியும் ஆராய்ந்தார் போட்டியின் மூன்றாவது நடுவர் . அந்த க்ரீமில் பந்தின் தன்மையை மாற்றக்கூடிய எந்த பொருளும் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியான பிறகே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது . மேலும் மொயினளி கடந்த ஒரு வருட காலமாக ஐசிசி யின் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடாததால் தான் இந்தக் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக போட்டி நடுவர் தெரிவித்துள்ளார் . மொயின் அலி ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -