ஐசிசி கனவு உலக டெஸ்ட் அணி 2023.. இந்திய வீரர்களுக்கு ஆச்சரிய இடம்.. ஆஸி ஆதிக்கம்

0
347
ICC

ஐசிசி கடந்த வருடத்திற்கான மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களுக்கும் தன்னுடைய உலக அணிகளை அறிவித்திருக்கிறது.

இந்த வகையில் அறிவிக்கப்பட்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி அணிகளில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக டி20 அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்க மேலும் மூன்று வீரர்கள் இடம் பெற்று இருந்தார்கள். இந்த வகையில் ஐசிசி உலக டி20 அணியில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் இருந்தது.

2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும் மொத்தமாக பேட்டிங் மற்றும் பௌலிங் என ஆறு இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றார்கள். ஐசிசி வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது.

அதே சமயத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இரண்டே இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. கடந்த ஒரு வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருந்ததை இது காட்டுகிறது.

இந்த அணியில் மொத்தமாக ஐந்து ஆஸ்திரேலியா வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இந்த அணிக்கு தற்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி ODI உலக அணி.. ரோகித் கேப்டன்.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்.. முக்கிய வீரருக்கு இடமில்லை

2023 ஐசிசி உலக டெஸ்ட் அணி :

உஸ்மான் கவாஜா, திமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி (வி. கீ), பாட் கம்மின்ஸ் (கே), ரவிச்சந்திரன் அஷ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்.