ICC-BCCI.. யாருக்கு ஆதரவாக இருக்கிறது?.. இந்தியாவுக்கு நடந்தது நியாயமா?.. குற்றச்சாட்டு!

0
477
ICT

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பல சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்காக இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. பேட்ஸ்மேன்களின் திறமை என்பது இங்கு ஒரு விஷயமாகவே இல்லை. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ரன்கள் அடிக்க முடியும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாளில் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இந்திய அணியும் முதல் நாளில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் நாளிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் விளையாட வந்த தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழந்தது. இப்படி ஒரே நாளில் மூன்று இன்னிங்ஸ் நடைபெற்றது.

மேலும் இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 12 ஓவர்கள் மட்டுமே போட்டி நடைபெற்ற முடிவுக்கு வந்துவிட்டது. மொத்தம் 107 ஓவர்கள் மற்றும் 642 பந்துகள் வீசப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்பொழுது இதற்கு முன்னால் வீரர்கள் பலரும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியாவில் மூன்று நாட்களில் டெஸ்ட் போட்டி முடியும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள். தற்பொழுது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இப்படியான ஆடுகளங்கள் ஒன்றரை நாட்களுக்குள் போட்டியை முடித்து விடுகிறது. இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என்று இந்திய தரப்பிலிருந்து பல கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய கேப்டன் ரோகித் சர்மா இது குறித்து கூறியிருக்கும் பொழுது, இந்திய ஆடுகளங்கள் குறித்து எதுவும் யாரும் குற்றச்சாட்டை முன்வைக்காவிட்டால், தானும் இது குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் ரோகித் சர்மா இந்த ஆடுகளத்திற்கு கள நடுவர்கள் என்ன மாதிரி ஆய்வு செய்து, எப்படியான மதிப்பெண்கள் தருவார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

பொதுவாக ஐசிசி அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ கட்டுப்படுத்துவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்காக, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மிக மோசமான ஆடுகளத்தை தயார் செய்தது. இதுகுறித்து இன்னும் ஐசிசி வாய் திறக்கவில்லை. மேலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐசிசி யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தங்களுடைய கடுமையான கண்டனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.