விராட் கோலிக்கு ஐசிசி விருது ; விராட் கோலி நெகழ்ச்சி பேட்டி; ட்விட்டர் இணைப்பு!

0
1912
Viratkohli

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்ம் கொஞ்சம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த விராட் கோலிக்கு, இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் ஆசியக் கோப்பைக்கு திரும்பியதிலிருந்து நிலைமைகள் மிகவும் நல்லபடியாய் மாற ஆரம்பித்து, தற்போது அவர் தனது சிறந்த நிலையை எட்டி இருக்கிறார்!

ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி, உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தன் வாழ்நாளில் மிகச் சிறந்த இன்னிங்ஸை விளையாடிக் காட்டினார் . மேலும் இந்தத் தொடரில் இதுவரை ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களுடன் 246 ரன்கள் குவித்து இருக்கிறார்!

ஐசிசி அமைப்பு மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு இந்த குழுவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளியில் இருந்து ரசிகர்கள் வாக்களிக்கலாம். இந்த அடிப்படையில் இந்த விருதுக்குரிய வீரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது ” அக்டோபர் மாதத்திற்கான ஆண்கள் கிரிக்கெட்டில் சிறந்த விரலுக்கான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கௌரவம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் இந்த விருதுக்கான குழுவினரால் சிறந்த வீரராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தப் பெருமையை இன்னும் எனக்கு அதிகரிக்கிறது ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய விராட் கோலி ” இந்த விருதுக்கு இந்த மாதத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்களுக்கும், எனது திறனுக்கு ஏற்றவாறு நான் செயல்பட ஆதரவளிக்கும் என் சக வீரர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் ” என்று கூறியுள்ளார்!