2023 – 27 வரை நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிட்டது ஐசிசி!! இந்திய அணி விளையாடும் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் விபரம் இதோ…

0
1268

2023-ம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எத்தனை டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் ஐசிசி தரப்பிலிருந்து நடத்தப்பட உள்ளது என்பது குறித்த முழு பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 777 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் 173 டெஸ்ட் போட்டிகள் 281 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 323 டி20 போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

- Advertisement -

இதில் குறிப்பாக இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைக்கு முன்பாக 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. மேலும் அதற்குள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் தல 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

ஆகஸ்ட் 022 முதல் 2027 ஆம் ஆண்டு வரை இந்திய அணி மொத்தம் 44 டெஸ்ட் போட்டிகள் 63 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

குறிப்பாக 2023 முதல் 2025 வரையிலான சுற்றில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 22 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி 21 டெஸ்ட் போட்டியிலும், இந்தியா 20 டெஸ்ட் போட்டியிலும் விளையாட உள்ளது. அதற்கு அடுத்த சுற்று 2025 முதல் 2027 நடக்கவுள்ளது. 2023 முதல் 25 வரை மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் அதற்கு அடுத்த சுற்று நான்காவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடக்க உள்ளது.

- Advertisement -

இந்த இரண்டு சுற்றிலும் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் மற்ற இரண்டு அணிகளுக்கு எதிராக தலா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் தலா ஐந்து டெஸ்ட் போட்டிகளை தங்களது சொந்த மண்ணில் விளையாடுகின்றன.

இந்த இரண்டு சுற்றுகளில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா ஒரு முறை 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் 19 முறை 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் ஐந்து முறை மூன்று போட்டியில் கொண்ட தொடரிலும் விளையாடுகின்றன.

முதல்முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டியை வளர்ப்பதற்கு இந்த இரண்டு சுற்றுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட போட்டிகள் பிரத்தியேகமாக பெண்களுக்கு என்று நடத்தப்பட இருக்கிறது. இது குறித்து ஐசிசி போது மேலாளர் கூறுகையில், “அடுத்த நான்கு வருடங்களுக்கு எப்படி கிரிக்கெட் போட்டிகளை வளர்க்கலாம். மேலும் எந்த அணிகளுக்கு எந்த அணிகளுடன் மோதல் செய்தால் போட்டி விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்கு எந்தவித அசவுகரியமும் இல்லாமல் நடத்தப்படும் என்று எங்களது குழு பெரிய திட்டங்களை வகுத்தது. கிரிக்கெட் என்பது பொதுபோட்டியாகும். அதை வெவ்வேறு நாடுகளில் உள்ள ரசிகர்களை ஈர்ப்பதற்கு ஐசிசி பெரும் பங்காற்றி வருகிறது. இந்த நான்கு வருடங்களுக்கு மட்டும் அல்லாமல், 2027 முதல் 2031 ஆம் ஆண்டு வரையும் எங்களிடம் அட்டவணை இருக்கிறது. அது குறித்தும் விரைவில் வெளியிடப்படும்.” என்று குறிப்பிட்டார்.

தற்போது எந்தெந்த நாடுகள் எத்தனை போட்டிகள் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் அந்த போட்டிக்கான தேதிகள் மற்றும் மைதானம் ஆகியவையும் வெளியிடப்படும் என்று ஐசிசி நிர்வாகி தெரிவித்தார்..