வெளியானது டி20 கிரிக்கெட் ஐசிசியின் முழுமையான தரவரிசை பட்டியல்; சூரியகுமார் யாதவ்?!

0
368
ICC ranking

ஐசிசி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தரவரிசை பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும். இந்த வகையில் தற்போது டி20 கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்கிற்கு ஒன்று என கைப்பற்றியது. இதில் நடந்த கடைசி 5வது போட்டியில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசியின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் மூன்றாவது போட்டி முடிந்த பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி t20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார். நான்காவது போட்டியில் சூரியகுமார் யாதவ் பெரிதாய் ரன்கள் அடிக்க வில்லை. 5வது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் தனது இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதனால் ஆறு இடங்கள் முன்னேறி 19வது இடத்தில் இருக்கிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆன ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் இருவரும் தரவரிசைப் பட்டியலில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர். 2 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் 50 இடங்கள் முன்னேறி 44 வது இடத்தில் இருக்கிறார். ஐந்தாவது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்ற குல்திப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன்மூலம் 58 இடங்கள் முன்னேறி 47வது இடத்தில் இருக்கிறார்.

அயர்லாந்தின் பால்ஸ் ஸ்ட்ரிலிங் பேட்டிங்கில் ஒரு இடம் முன்னேறி இருபத்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரி மிச்சல் இருபத்தி மூன்று இடங்கள் முன்னேறி முப்பத்தி எட்டாவது இடத்தில் இருக்கிறார். தென்ஆப்ரிக்க அணியின் பேட்ஸ்மேன் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அயர்லாந்து அணியுடனான 2 டி20 போட்டிகளில் 72 மற்றும் 42 ரன்களை அடித்ததன் மூலம், 13வது இடத்தில் இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க அணியின் இடதுகை ஸ்பின்னர் கேசவ் மகாராஜ் 10 இடங்கள் முன்னேறி 18வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி இருபத்தி மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் முப்பத்தி ஒன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஜிம்ப்பாவே வீரரான சிகந்தர் ராஸா பங்களாதேஷ் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 2 சதங்கள் அடித்து ஜிம்பாப்வே அணி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். இதனால் 10 இடங்கள் முன்னேறி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இருபத்தி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் 79வது இடத்திற்கு வந்து இருக்கிறார்.

இப்படி பேட்டிங் பௌலிங் இரண்டிலும் மிகச்சிறப்பாக சிகந்தர் ராஸா செயல்பட்டதால் அவரது கிரிக்கெட் கேரியரில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் மிகச்சிறப்பான இடமான ஏழாம் இடத்தை தற்போது பெற்றிருக்கிறார். வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம், இந்திய வீரர் சூர்யகுமார் இடையே டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இடத்தை அடைய போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!