ஐசிசி 50 ஓவர் மகளிர் உலககோப்பை அட்டவணை முழு விவரம்.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது?

0
87

ஐசிசி 50 ஓவருக்கான மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 30 அன்று தொடங்கி, இறுதிப் போட்டி நவம்பர் 2 அன்று கொழும்பு அல்லது பெங்களூரில் நடைபெறும்.

இந்தியா, 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 30 அன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இலங்கையை எதிர்கொள்வார்கள். அடுத்த நாள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இந்தூரில்மோதவுள்ளனர்.

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது?

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 5 அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி தங்களது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது, இது பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளது.

லீக் கட்டம் அக்டோபர் 26 அன்று இரண்டு போட்டிகளுடன் முடிவடையும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29 அன்று தொடங்கும், மற்றொரு நாக்-அவுட் போட்டி அக்டோபர் 30 அன்று நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 2 அன்று நடைபெறும்.

- Advertisement -

2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை முழு அட்டவணை:

செப்டம்பர் 30- செவ்வாய் இந்தியா vs இலங்கை -பெங்களூரு – மாலை 3:00

அக்டோபர் 1, புதன் -ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து- இந்தூர்
-மாலை 3:00

அக்டோபர் 2, வியாழன் -வங்கதேசம் vs பாகிஸ்தான்- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 3, வெள்ளி- இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா-பெங்களூரு- மாலை 3:00

அக்டோபர் 4, சனி – ஆஸ்திரேலியா vs இலங்கை- கொழும்பு-மாலை 3:00

அக்டோபர் 5, ஞாயிறு- இந்தியா vs பாகிஸ்தான்- கொழும்பு- மாலை 3:00


அக்டோபர் 6, திங்கள்- நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா- இந்தூர்- மாலை 3:00

அக்டோபர் 7, செவ்வாய்- இங்கிலாந்து vs வங்கதேசம்- கவுஹாத்தி- மாலை 3:00

அக்டோபர் 8, புதன்- ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 9, வியாழன்- இந்தியா vs தென்னாப்பிரிக்கா- விசாகப்பட்டினம்- மாலை 3:00

அக்டோபர் 10, வெள்ளி- நியூசிலாந்து vs வங்கதேசம்- விசாகப்பட்டினம்- மாலை 3:00

அக்டோபர் 11, சனி- இங்கிலாந்து vs இலங்கை- கவுஹாத்தி
-மாலை 3:00

அக்டோபர் 12, ஞாயிறு- இந்தியா vs ஆஸ்திரேலியா-விசாகப்பட்டினம்- மாலை 3:00

அக்டோபர் 13, திங்கள்- தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம் -விசாகப்பட்டினம்- மாலை 3:00

அக்டோபர் 14, செவ்வாய்- நியூசிலாந்து vs இலங்கை- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 15, புதன்- இங்கிலாந்து vs பாகிஸ்தான்- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 16, வியாழன்- ஆஸ்திரேலியா vs வங்கதேசம்-விசாகப்பட்டினம்- மாலை 3:00

அக்டோபர் 17, வெள்ளி- தென்னாப்பிரிக்கா vs இலங்கை- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 18, சனி- நியூசிலாந்து vs பாகிஸ்தான்- கொழும்பு-மாலை 3:00

அக்டோபர் 19, ஞாயிறு- இந்தியா vs இங்கிலாந்து-இந்தூர்-மாலை 3:00

அக்டோபர் 20, திங்கள்-இலங்கை vs வங்கதேசம்-கொழும்பு-மாலை 3:00

அக்டோபர் 21, செவ்வாய் தென்னாப்பிரிக்கா vs பாகிஸ்தான்-கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 22, புதன்- ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து- இந்தூர்- மாலை 3:00

அக்டோபர் 23, வியாழன்- இந்தியா vs நியூசிலாந்து-கவுஹாத்தி- மாலை 3:00

அக்டோபர் 24, வெள்ளி- பாகிஸ்தான் vs இலங்கை- கொழும்பு- மாலை 3:00

அக்டோபர் 25, சனி ஆஸ்திரேலியா vs இலங்கை- இந்தூர்-மாலை 3:00

இதையும் படிங்க: விராட் ரோஹித் அஸ்வின் கிடையாது.. என் ரோல் மாடல் இந்த இளம் வீரர்தான் – சாய் சுதர்சன் கருத்து

அக்டோபர் 26, ஞாயிறு,இங்கிலாந்து vs நியூசிலாந்து-கவுஹாத்தி-மாலை 3:00

அக்டோபர் 26, ஞாயிறு-இந்தியா vs வங்கதேசம்.பெங்களூரு-மாலை 3:00

அக்டோபர் 29, புதன் அரையிறுதி 1 – கவுஹாத்தி/கொழும்பு-மாலை 3:00

அக்டோபர் 30, வியாழன்- அரையிறுதி 2 – பெங்களூரு-மாலை 3:00

நவம்பர் 2, ஞாயிறு-இறுதிப் போட்டி -கொழும்பு/பெங்களூரு- மாலை 3:00

- Advertisement -