விராட் ரோஹித் அஸ்வின் கிடையாது.. என் ரோல் மாடல் இந்த இளம் வீரர்தான் – சாய் சுதர்சன் கருத்து

0
263
Sai

தனக்கு சிறுவயதில் இருந்து ஒரு தமிழ்நாட்டு இளம் வீரர்தான் உத்வேகமாக இருந்து வந்திருக்கிறார் எனவும், அவரைப் பார்த்து தானும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என நினைத்ததாக சாய் சுதர்சன் தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 700க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் வென்றார். மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு உத்வேகம் தந்தவர் இவர்தான்

இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும் பொழுது “எனக்கு சிறுவயதில் இருந்து வாஷிங்டன் சுந்தர் உத்வேகமாக இருந்து வருகிறார். நான் அவருக்கு எதிராக அவருக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் அவருடைய திறமைக்காக அவரை நிறைய முறை பாராட்டி இருக்கிறோம். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்காக முன்னேறிய விதம் மிகவும் விரைவானது. ஐபிஎல் தொடரில் சில முறை சிறப்பாக செயல்பட்டு உடனே இந்திய அணிக்கு தேர்வானார். இது என் மனதில் அப்படியே இருக்கிறது”

“நானும் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால், அவர் எப்படி முன்னேறினார் என்பது எனக்கு நல்ல உந்துதலாக அமைந்தது. மேலும் நானும் அப்படியே இந்திய அணிக்கு முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். இந்த விஷயத்தில் அவர் எனக்கு உத்வேகமாக இருந்தார். இது சிறுவயதிலிருந்தே எனக்கு நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாய் நிறைய சாதிப்பார்

சாய் சுதர்சன் குறித்து வாஷிங்டன் சுந்தர் பேசும்பொழுது “என்னுடைய பல நண்பர்களும், பயிற்சியாளர்களும் சாய் சுதர்சனின் வளர்ச்சி பற்றி நிறைய முறை என்னிடம் பேசி இருக்கிறார்கள். அவர் எப்போதும் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். குறிப்பாக 3 ஆண்டுகளில் அவர் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறார்”

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. அறிவிக்கப்பட்ட ஆச்சரியமான இலங்கை அணி.. 6 அன்கேப்டு வீரர்கள்.. 2027க்கு குறி

“அவர் விளையாடுவதை ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் நான் பார்க்கும் பொழுதும் அவரிடம் இருந்து அவரது திறமையில் இருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் நிச்சயம் பல குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கப் போகிறார். குறிப்பாக அவர் சென்னையில் இருந்து வந்ததால் சென்னையில் இருக்கும் பல குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -