இந்திய அணி அடுத்த ஆறு மாதங்கள் கழித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலியா லெஜன்ட்? இயான் சேப்பல் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சரியாக அமையவில்லை. ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை தொடர்ச்சியாக விளையாடி அவர் ஆட்டம் இழந்தது பெரிய கவலையை உண்டாக்கி இருக்கிறது.
விராட் கோலி ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு
தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே உள்நாட்டு சிவப்புப் பந்து ரஞ்சி டிராபியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் இருவருமே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. மேலும் ரோகித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடிவு செய்திருப்பது தேர்வுக்குழுவுக்கு பிரச்சனையையும் உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் இயான் சேப்பல் கூறும்பொழுது “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் அனுபவம் மிகவும் விலைமதிக்க முடியாததாக இருக்கும். இந்த தொடரில் அவர் புத்துயிர் பெற்று வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். முக்கியமாக இளம் வீரர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவது அவர் நினைத்தமைக்கு திரும்புவது மிகவும் முக்கியம். மேலும் ஆஸ்திரேலியாவில் கான்ஸ்டாஸ் தோளில் இடித்தது போன்ற முட்டாள்தனங்களை கைவிட வேண்டும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இங்கிலாந்து தொடரில் ஓய்வு பெற்றால் அது இந்திய பேட்டிங் வரிசையில் பெரிய இடைவெளியை உண்டாக்கும்”
தேர்வாளர்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்
“தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பிரச்சனைக்குரிய பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக இந்திய தேர்வாளர்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். 38 வயதாகும் ரோஹித் சர்மா அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடுவது கடினமானது. இந்திய கிரிக்கெட் வாரியம் நட்சத்திர வீரர்களை பிரிய தயக்கம் காட்டினாலும், ரோகித் சர்மா தொழில்நுட்ப ரீதியாக போராட ஆரம்பித்து விட்டார்”
இதையும் படிங்க : இனி பிஎஸ்எல் விளையாட மாட்டேன்.. 22 வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் – காரணம் என்ன?
“அதே சமயத்தில் கேஎல்.ராகுல் தொடக்க இடத்திற்கு நல்ல வீரராக நம்பிக்கை அளிக்க கூடியவராக தெரிகிறார். மேலும் பும்ரா கிடைக்காவிட்டால் கேப்டன் பொறுப்பு பிரச்சனைக்குரியதாக மாறுகிறது. ஆஸ்திரேலியாவில் அவர் திறமையான மற்றும் ஒழுக்கமான கேப்டன் எனக் காட்டினார். ஆனால் இந்தியா ஒரு சக்தியாக இருக்க வேண்டுமென்றால் பேட்டிக்கு மற்றும் பந்துவீச்சு என இரண்டு பிரிவுகளிலும் அவருக்கு ஆதரவு தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.






