இனி பிஎஸ்எல் விளையாட மாட்டேன்.. 22 வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் – காரணம் என்ன?

0
63
Ihsanullaq

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அதிவேக பந்து வீச்சாளரான 22 வயதான இஹ்ஷானுல்லாஹ் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இவர் எட்டாவது பிஎஸ்எல் டி20 லீக்கில் மொத்தம் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குறிப்பாக இவர் சாதாரண முறையில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவது பலரையும் கவர்ந்தது. இப்படியான நிலையில் இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது பெரிய பரபரப்பை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

முக்கிய காரணம் என்ன?

இவருக்கு கடந்த வருடத்தில் பந்து வீசும் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக இவரால் மீண்டும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச முடியாது என பிஎஸ்எல் அணி உரிமையாளர்கள் கருதுகிறார்கள். எனவே பத்தாவது பிஎஸ்எல் சீசனில் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவர் ஏற்கனவே விளையாடிய முல்தான் சுல்தான் அணியின் உரிமையாளர் தரீக் இவரால் மீண்டும் பழைய முறையில் திரும்பி வந்து விளையாட முடியாது, வேகமாக பந்து வீச முடியாது என்பது போல கூறி இருந்தார். இதன் காரணமாக இஹ்ஷானுல்லாஹ் கடுமையான விரக்தி அடைந்திருக்கிறார். எனவே இனி பிஎஸ்எல் லீக்கில் தான் விளையாட போவது இல்லை எனவும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

என்னை யாரும் ஆதரிக்கவில்லை

இது குறித்து இஹ்ஷானுல்லாஹ் கூறும்பொழுது “நான் பிஎஸ்எல் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். நான் இனி பிரான்சிசைஸ் டி20 லீக்கில் விளையாட போவதில்லை. பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதை விட பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது இலக்காக இருக்கும்”

இதையும் படிங்க : ரோகித் தந்த ட்விஸ்ட்.. குப்பை மாதிரி வதந்திகளை பரப்பாதீங்க.. உண்மை இதான் – ராஜீவ் சுக்லா பேட்டி

“நான் கடந்த காலங்களில் பிஎஸ்எல் தொடரில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறேன். இருந்த போதும் எந்த அணி உரிமையாளரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நீங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்தால் அணி உரிமையாளர்கள் உங்கள் பின்னால் வந்திருக்க வேண்டும். ஆனால் என்னை யாருமே அணுகவில்லை. நான் 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பந்து வீசுவேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் எட்டாவது பிஎஸ்எல் லீக்கில் பந்து வீசியதை விட வேகமாக வீசி என்னை நிரூபிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -