இந்திய வீரர்களுக்கு சுழற்பந்து வீச்சு விளையாட தெரியவில்லை- இயன் சேப்பல் கிண்டல்

0
116

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயன் சேப்பல் கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் புஜாரா இந்த தொடர் முழுவதும் ஒரு மாதிரியாகவே அவசரப்படுகிறார். புஜாரா இந்தத் தொடர் முழுவதும் அமைதியாக விளையாடவில்லை. இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை.

என்னை பொறுத்தவரை அவர் சுழற் பந்து வீச்சு சிறப்பாக விளையாடுகிறார் என்று தோன்றவில்லை. அவர் கொஞ்சம் பதற்றப்படுகிறார். இதேபோன்று இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் சுழற் பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்வார்கள் என்று என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவை இந்த டெஸ்டில் முன்பாகவே பதற்றம் அடைய செய்து விட்டார்கள்.

ஆடுகளம் ஒரு காரணமாக இருக்கும் என எனக்கு தெரியும். மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் பந்தை துல்லியமாக வீசினார்கள். நான் பார்த்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி பேட்டிங் செய்வார்களோ அதனை இந்தியா இம்முறை செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியா இந்த டெஸ்டில் விளையாடும் போது உஸ்மான் கவாஜா சிறப்பாக செயல்பட்டார்.மார்னஸ் உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார். உஸ்மான் கவஜா விளையாடும் போது ரோகித் சர்மா விளையாடிய ஆட்டம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய இந்த டெஸ்டில் இந்தியாவை ஓரம் கட்டி விட்டது.

- Advertisement -

இந்த இன்னிங்ஸில் முன்னிலை பெற ஆஸ்திரேலியா நிச்சயம் தகுதி வாய்ந்த அணியாக தான் உள்ளது என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் இந்திய அணி வீரர்கள் சுழற் பந்து வீச்சு எதிர்கொள்வது என்றால் அல்வா சாப்பிடுவது போல் அபாரமாக விளையாடுவார்கள். ஆனால் தற்போது உள்ள இந்திய  வீரர்கள் பந்து ஆடுகளத்தில் நன்றாக திரும்பினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

குறிப்பாக விராட் கோலியே டெஸ்ட் கிரிக்கட்டில் சதம் அடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. புஜாராவும் முன்பு போல் தொடர்ந்து சிறப்பாக விளையாடியது இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகமான டெஸ்டில் நன்றாக விளையாடினார். அதன் பிறகு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்திய வீரர்கள் சுழற் பந்துவீச்சை சரியாக விளையாடுவதில்லை என்பதை மறைமுகமாக இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.