“நம்ம பெஸ்ட் பிளேயர்ஸ ஐபிஎல் மாதிரி அனுப்பாம இருக்க இதை செய்யலாம்” – வெஸ்ட் இண்டீஸ் இயான் பிஷப் ஐடியா

0
78
Ian bishop

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் மிகச்சிறந்த அணியாக விளங்கி தற்பொழுது உலக கோப்பைக்கு தேர்வு பெற முடியாத அளவுக்கு கீழே வந்திருக்கிறது.

ஆனாலும் கூட அவர்களது வீழ்ச்சியிலும் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அபாரமாக செயல்பட்டு இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றியவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த இரண்டு முறையும் கேப்டனாக இருந்த டேரன் சமி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக வந்திருக்கிறார்.

இவரது வருகைக்குப் பின்பு மீண்டும் வெஸ்ட் இண்டிஸ் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. குறுகிய காலத்தில் பலம் பொருந்திய அணியாக மாறி இருக்கிறது.

இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டுக்கு மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடிய சிறந்த வேகபந்துவீச்சாளராக ஷாமர் ஜோசப் கிடைத்திருக்கிறார்.

- Advertisement -

பிஎஸ்எல் தொடருக்கு வாய்ப்பு பெற்ற இவர் அடுத்து ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணிக்காக விளையாட இருக்கிறார். ஆஸ்திரேலியா தொடரில் காலில் காயம் அடைந்ததில் இருந்து குணமடைந்து கொண்டு வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாடி சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தேவையான பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போகிறது. சில நேரங்களில் பொதுவாகவே அவர்கள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் ஷாமர் ஜோசப் போன்ற சிறந்த வீரர்களை வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட வைப்பதற்கு, அந்த அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் ஒரு முக்கிய யோசனை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மற்றும் கயானா அரசாங்கம் மேலும் தனியார் அமைப்புகள், முக்கிய வீரர்கள் குறிப்பாக ஷாமர் ஜோசப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நிறைய கிரிக்கெட் விளையாடுவதற்கு வசதியாக, அவர்களுக்கு என ஒரு இழப்பீட்டு நிதியை உருவாக்க வேண்டும். அவர்களுடைய வேகம் பலமே நாம் அதை வீணடிக்க கூடாது” என குறிப்பிட்டு இருக்கிறார்.