ஒரு வாரமா யோசிச்சேன்.. ப்ளீஸ் பிசிசிஐ மயங்க் யாதவை பாதுகாக்க 2 வருஷம் இதை செய்யுங்க – இயான் பிஷப் வேண்டுகோள்

0
120
Mayank

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், அந்த அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஒரு ஓவர் வீசி வெளியேறினார். தனித்திறமை கொண்ட இவரை எப்படி பாதுகாக்கலாம் என வெஸ்ட் இண்டிசை சேர்ந்த முன்னாள் வீரர் இயான் பிசப் பேசி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி டெல்லியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருக்கு விளையாடுவதற்கு லக்னோ அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதல் பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி செய்த போது காயம் அடைந்து துரதிஷ்டவசமாக விளையாட முடியாமல் போனார். இதற்கடுத்து இந்த ஆண்டு கிடைத்த வாய்ப்பில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக தனது அதிவேகத்தால் தனி ஒரு வீரராக இரண்டு வெற்றிகளை லக்னோ அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இவரது சிறப்பான தனித்தன்மை கொண்ட வேகப்பந்துவீச்சின் காரணமாக, இவரை டி20 உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்வது குறித்தான நிறைய விவாதங்கள் சமூக வலைதளங்களில் ஆரம்பித்தன. முன்னாள் வீரர்களும் இதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் தான் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவர் மட்டும் வீசி வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வலி உண்டானதால் வெளியேறினார். மேலும் தற்காலிகமாக குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதிவேகமாக வீசக்கூடிய யாருக்கும் கிடைக்காத கட்டுப்பாடு அவருக்கு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவரை ஒரு அபூர்வமான வேகப்பந்துவீச்சாளராகவே கருதுகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ரியான் பராக் இப்பவும் ஈகோவோடதான் இருக்கார்.. மரியாதை குறைவா சொல்லலை ஆனால்.. – பிராட் ஹக் பேட்டி

இந்த நிலையில் இவரை எப்படி பாதுகாப்பது என பேசி இருக்கும் வெஸ்ட் முன்னாள் வீரர் இயான் பிசப் கூறும் பொழுது ” நான் என்னுடன் அணி புரியும் சக ஊழியருடன் மயங்க் யாதவை பாதுகாப்பது குறித்து கடந்த ஒரு வாரமாக பேசி ஆலோசனை செய்து வருகிறேன். இதில் நான் முடிவு செய்தது என்னவென்றால், அவருக்கென்று ஒரு தனிப் பயிற்சியாளர் மற்றும் ஒரு தனி மருத்துவரை வைத்து, இரண்டு ஆண்டு காலம் அவரை தொடர்ந்து பிசிசிஐ கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம் என்று உணர்கிறேன். தனித்திறமை கொண்ட அவருக்காக பிசிசிஐ இதைச் செய்ய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்