“நான் நேத்து செஞ்ச இத எப்பவோ கத்துக்கிட்டு செஞ்சிருக்கனும்.. பரவால்ல ஆனாலும்..!” – அஷ்வின் அசத்தலான மாஸ் அப்டேட்!

0
7837
Ashwin

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்றதோடு தொடரையும் வென்றது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், நேற்று 399 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து குவித்து, 217 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணியை ஆல் அவுட் செய்து, அசத்தல் வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில், தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கொடுத்தது.

இதற்கு அடுத்து வார்னர் மற்றும் லபுசேன் இணைந்து கொஞ்சம் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் தன்னுடைய அற்புதமான சுழற்பந்து வீச்சினால் வார்னர் லபுசேன் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் மூவரது விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். இதில் வார்னர் மற்றும் லபுசேன் இருவருக்கும் கேரம் பால் பயன்படுத்தி விக்கெட் கைப்பற்றினார்.

இன்று அது குறித்து பேசி உள்ள அஸ்வின் ” மழை வந்து இடைவேளைக்குப் பிறகு அவர்கள் இழப்பதற்கு எதுவும் கிடையாது. அவர்கள் அதிரடியாக ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்தாக வேண்டும். 50 ஓவர்களில் 400 ரன்கள் சேஸ் செய்வது முற்றிலும் அது வேறானது.

- Advertisement -

பந்துவீச்சில் எனது தரப்பில் நான் லென்த்தை சரியாக வைக்க நினைத்தேன். மேலும் வேகத்தை மாற்றி வீச முடிவு செய்தேன். லபுசேன் அதற்கு முன்னால் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி இருந்தார். அதனால் அடுத்து அவர் ஸ்லாக் செய்வார் என்று நினைத்தேன்.

அதனால் அவர் ஸ்டெம்பை விட்டு விளையாட முயற்சி செய்தால் நான் என் வேகத்தை மேலும் கீழுமாக மாற்ற முடிவு செய்தேன். நான் ஆப் பிரேக் மற்றும் கேரம் பால் இரண்டையும் என்னுடைய ஆள்காட்டி விரலை பயன்படுத்தி வீசினேன். இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது செய்கிறேன். என்னால் அவர்களுக்கு உருவாக்க முடிந்த நிச்சயமற்ற தன்மை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்கின்ற ஆதரவு குரல் மேலும் பெருக ஆரம்பித்திருக்கிறது. அவர் வாய்ப்பு பெற்ற இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!