கடைசி ரன் அடிக்கிறவரைக்கும் சீட்லயே உக்கார முடியல.. பிட்ச்ல இருப்பதை விட, வெளியில் இருந்து பார்ப்பது தான் ரொம்ப பிரஷர்! – ஆட்டநாயகன் உஸ்மான் கவாஜா பேட்டி!

0
574

“பிட்சில் இருப்பதைவிட, வெளியில் இருந்து பார்ப்பது தான் மிகவும் கடினம். ஈரக்கொலையே நடுங்கிவிட்டது.” ஆட்டநாயகன் உஸ்மான் கவாஜா பேட்டியளித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. துவக்க வீரர் 141 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இதனையடுத்து 7 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது 280 ரன்கள் முன்னிலை பெற்றது.

இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி வார்னர், ஸ்மித், லபுஜானே ஆகியோரின் விக்கெட்டை விரைவாக இழக்க தடுமாற்றம் கண்டபோது கவாஜா ஒரு முனையில் நின்றுகொண்டு தொடர்ந்து நம்பிக்கையளித்து வந்தார்.

உறுதியாக நின்று 65 ரன்கள் அடித்துக்கொடுத்து அவுட் ஆனார். கடைசியில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, கேப்டன் கம்மின்ஸ் விக்கெட் இழக்காமல் நின்று 44 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் 141 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 65 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்தபின் பேட்டியளித்த உஸ்மான் கவாஜா பேசுகையில், “இதயம் துடிப்பதே நின்றுவிட்டது. களத்தில் இருந்தால் கூட இவ்வளவு அழுத்தத்தை உணர்ந்திருக்க மாட்டேன். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பது தான் மிகவும் அழுத்தம் மற்றும் கடினமாக இருந்தது. சக அணியினருடன் அமர்ந்து அமைதியாக பார்க்கவே முடியவில்லை. நடுக்கத்தின் உச்சத்தில் இருந்தேன்.

இதற்குமேல் நடுக்கம் இருக்கக்கூடாது என்று, மெதுவாக ஓடும் டிவியில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன். போட்டியின் கடைசி வரை யார் பக்கம் வெற்றி என்பதே தெரியாத அளவிற்க்கு சென்றது. கடந்த முறை இங்கிலாந்து வந்தபோது பேட்ஸ்மேன்களுக்கு சரியாக செல்லவில்லை. இல்லையெனில் நீங்கள் ஸ்மித்தாக இருக்கவேண்டும்(சிரித்தபடி). இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி. இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதிலும் சிறப்பாக செயல்படுவோம் என நினைக்கிறேன்.” என கவாஜா பேசினார்.