“நான் ஸ்பெஷலா எதையும் கொண்டாட மாட்டேன்.. மொமெண்டம் பத்தி கவலை கிடையாது!” – பும்ரா சிறப்பு பேச்சு!

0
345
Bumrah

இந்திய அணியின் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான ஒரு அணியாக இருந்து தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீசாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய பந்துவீச்சு படையின் தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறார்.

- Advertisement -

காயத்திற்கு பிறகு திரும்பி இருக்கும் அவருடைய பந்து வீச்சு எப்படி இருக்கும் என்கின்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வந்தது. சரியான ரிதம் அமையாவிட்டால் அது ஒட்டுமொத்த அணியையும் பாதிக்கும் என்கின்ற கவலை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பும்ரா மிகச் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஆச்சரியப்படக் கூடிய அளவில் பந்துவீச்சில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்.

காயத்திற்கு முன்பு அவர் குறைந்த தூரத்தில் இருந்து பந்து வீசுவார். தற்பொழுது அவர் ஓடிவரும் தூரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். இதனால் பந்தை வீச உடலுக்கு கொடுக்கப்படும் சக்தி குறைகிறது. இதனால் காயம் அடையும் வாய்ப்பும் குறைகிறது.

- Advertisement -

மேலும் அவர் காயத்திற்கு பின்பு மறுவாழ்வு நேரத்தில் தன்னுடைய அவுட் ஸ்விங் பந்துவீச்சை மிகவும் கூர்மைப்படுத்தி வேலை செய்திருக்கிறார். சொல்லப்போனால் காயத்திற்கு முன்பிருந்த பும்ராவை விட இப்பொழுது இருக்கும் பும்ராதான் ஆபத்தான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

நடப்பு உலக கோப்பையின் மூன்று போட்டிகளிலும் அவர் சேர்த்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவர் ஒரு ஓவருக்கு நான்கிற்கும் குறைவான ரன்கள்தான் கொடுத்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
” நான் கொண்டாட்டத்தில் ஈடுபடும் பொழுது, எனக்கு அப்பொழுது ராஷ்போர்டு ஞாபகம் வந்தது. அவர் செய்வது போலவே தலையில் கை வைத்து செய்தேன். அது அருமையான உணர்வாக இருந்தது. மற்றபடி இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் எந்த கதையும் கிடையாது. நான் அதை வெகு இயல்பாகவே செய்தேன்.

ஆனால் தற்பொழுது போட்டி முடிந்து நான் கொண்டாடுவதற்கு முடியாமல் மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் கொண்டாடிய ஒரே தருணம் அது மட்டும்தான்.

நாங்கள் மொமண்டத்தை பற்றி சிந்திக்கவில்லை. அணி எப்பொழுதும் மீண்டு வருவதை பற்றி சிந்திக்கிறது. நாங்கள் மூன்று ஆட்டங்களில் வென்று இருக்கிறோம். எங்கள் தயாரிப்பு நன்றாக இருந்தால், முடிவுகள் எங்கள் பக்கத்தில் சரியாக இருக்கும்.

அணியில் அதிர்வு நன்றாக இருக்கிறது. வீரர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் செயல்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இப்போது இருப்பதற்கு இது ஒரு நல்ல இடம்!” என்று கூறியிருக்கிறார்!