“உங்கள குழந்தை மாதிரி இந்தியா ஜெயிச்சது.. என்னால பாக்க முடியல அவமானமா இருக்கு!” – அக்தர் வேதனையான பேச்சு!

0
1850
Akthar

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோற்றதில்லை என்கின்ற சாதனையை நேற்று நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி தக்க வைத்தது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை மிக எளிமையாக எட்டாவது முறையாக தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வென்றது.

- Advertisement -

இதுவரை பாகிஸ்தான அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பெற்றிருந்த தோல்விகளை விட, நேற்றைய தோல்வி பெரிய படுதோல்வியாக பாகிஸ்தான் அணிக்கு அமைந்திருக்கிறது.

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டு, அந்த அணி எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

இந்த நிலையில் உலககோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை உலக சாதனை சேஸ் செய்து பாகிஸ்தான் அணி வென்றதால் அவர்கள் தரப்பில் நம்பிக்கை அதிகரித்து இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மிகச் சிறந்த போட்டியை கொடுக்கும் என்று நம்பினார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெல்லும் என்கின்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தோற்றது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து சோயப் அக்தர் கூறும் பொழுது ” 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றை மீண்டும் இந்திய அணி செய்யப்போகிறது என்று நான் நம்பத் தொடங்கி இருக்கிறேன். அரை இறுதியில் அவர்கள் குழப்பமடையவில்லை என்றால் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை அவர்கள் வெல்வார்கள்.

வெரி குட் இந்தியா. நீங்கள் எங்களை டெஸ்ட்ராய்டு செய்தீர்கள். நீங்கள் எங்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறீர்கள். எங்களை ஆட்டத்தில் அழித்து விட்டீர்கள்.

பாகிஸ்தான் விளையாடிய விதத்தில் அவமானம் நம் முன்னே இருக்கிறது. இந்தியா பாகிஸ்தானை குழந்தையைப் போல வென்றது. ரோகித் சர்மா இரக்கமில்லாமல் அடித்தார். என்னால் அதைப் பார்க்க முடியவில்லை!” என்று கூறியிருக்கிறார்!