“ஜடேஜா பவுலிங்க ரொம்ப உன்னிப்பா பாத்துட்டு வரேன்..!” – ஆட்டநாயகன் சான்ட்னர் ஆச்சரிய பேச்சு!

0
1634
Santner

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் சிறிய அணியான நெதர்லாந்து அணியை வீழ்த்தி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து முதலில் டாசை தோற்று பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் வில் எங் 70 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் சான்ட்னர் அதிரடியாக 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.

இதற்கு அடுத்து நெதர்லாந்து அணிக்கு ஆக்கர்மேன் அரை சதம் அடித்தார். அவரைத் தாண்டி கேப்டன் எட்வர்ட்ஸ் 30 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை. இதனால் நெதர்லாந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பந்துவீச்சில் சான்ட்னர் பத்து ஓவர்களுக்கு 59 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். உலகக் கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் என்ற சிறப்பும் கிடைத்தது. மேலும் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

- Advertisement -

போட்டி முடிவுக்கு பின்னால் பேசிய அவர்
“இந்திய சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை மிக நெருக்கமாக இருந்து எப்படி பந்து வீசுகிறார் என்று பார்த்து வருகிறேன். மேலும் இப்பொழுது எதுவும் மோசம் இல்லை. எங்களுடைய பேட்ச்மேன்களுக்கு எல்லா பாராட்டும் போய் சேர வேண்டும். அவர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

எங்களுக்கு பேட்டிங்கில் நடுவில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது. ஆனாலும் நாங்கள் 320 ரன்களை கடந்தோம். மேலும் பந்து மின்விளக்குகளின் கீழ் சறுக்கியது. ஆனாலும் நாங்கள் அவற்றை கட்டுப்படுத்தி பந்து வீசினோம். எங்களுக்கு இன்று நிறைய கிடைத்தது.

இங்கிலாந்து அணி உடன் விக்கெட் எடுத்தது போலவே எடுத்தோம். நான் இன்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட விக்கெட் கிடைத்தது. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. நெதர்லாந்து அணியின் ஸ்பின்னர்களும் நன்றாக செயல்பட்டார்கள்!” என்று கூறி இருக்கிறார்!