“எங்க மொத்த வீரர்களையும் விற்று இந்த இந்திய வீரரை வாங்குவேன்!” – மேக்ஸ்வெல் மாஸ் பேட்டி!

0
1775
Maxwell

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட பிஜிசிஐ நிர்வாகம் தடை விதித்துள்ளது எல்லாரும் அறிந்ததே . இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் ஆட்டங்களில் பங்கு பெற வேண்டும் என்றால் அவர்கள் தங்களது ஓய்வு அறிவித்தால் மட்டுமே விளையாட முடியும் . ஒருவேளை இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் ஆட அனுமதி பெற்றால் இந்திய வீரர்கள் தான் அதிகமாக பணம் கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களாக இருப்பார்கள் .

விராட் கோலி ,ரோஹித் சர்மா ,கே எல் ராகுல் ஹர்திக் பாண்டியா,ஜஸ்பிரீத் பும்ரா இதுபோன்ற உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் இந்தியாவின் டி20 நாயகன் சூர்யா குமார் யாதவ் . ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சூரியகுமார் யாதவ் தன்னுடைய 360 டிகிரி ஆட்டத்தால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களையும் கவர்ந்துள்ளார் .

- Advertisement -

இவரது அசாத்தியமான பேட்டிங் திறமைக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களாக உள்ளனர் . அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் லீக் டி20 கிரிக்கெட் பற்றி அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல் இடம் நேர்காணல் எடுக்கப்பட்டது .

நேர்காணலின் போது நிருபர் ஒருவர் உங்கள் அணியில் இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவை எடுப்பீர்களா என்று கேட்டார் . அதற்கு பதில் அளித்த மேக்ஸ்வெல் ” எங்கள் பிக் பாஸ் அணியில் உள்ள மொத்த வீரர்களை விற்று அதில் வரும் பெரும் தொகையைக் கொண்டு சூரியகுமார் யாதவை வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பதில் அளித்துள்ளார் .

மேலும் இது பற்றி பேசிய அவர் “இன்றைய காலகட்டத்தில் சூரியகுமார் தான் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் , அப்படி ஒரு வீரர் இருக்கும் பொழுது எந்த அணி தான் அவரை வாங்க முன் வராது ” என்றும் தெரிவித்தார் ,

- Advertisement -

2022ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி வருகிறார் . இந்த வருடத்தின் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக ரன் குவித்துள்ள வீரரும் அவர்தான். இந்த வருடத்தில் 31 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 1164 ரன்களை குறித்துள்ளார் . அவரது சராசரி 46,56 ஆகும் . இதில் 9 அரை சதங்களும் 2 சதங்களும் அடக்கம் , டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையும் சூரியகுமார் யாதவிடமே உள்ளது .,