“பெரிய ஸ்கோர் அடிப்பேன்; மும்பை கிரிக்கெட் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது” – ஜெயஸ்வால் மாஸ் பேட்டி!

0
280
Jaiswal

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது!

இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருக்கும் டெஸ்ட் மற்றும் அடுத்த நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது!

- Advertisement -

இதில் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த வருடம் இவருடைய ஐபிஎல் செயல்பாடு மட்டும் இல்லாமல், உள்நாட்டு சிவப்புப்பந்து செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது இவரை தேர்வு செய்ய வைத்திருக்கிறது!

மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்து கடுமையாக உழைத்து, இன்று இந்த இளைஞர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். இவர் குறித்தான நம்பிக்கை இந்திய அணி நிர்வாகத்துக்கும் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கிறது.

தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசி உள்ள அவர் “எனக்கு இது மிகவும் முக்கியமானது. நான் சிவப்பு பந்தில் விளையாடுவதை எப்பொழுதும் விரும்பி ரசித்து விளையாடுகிறேன். மும்பை கிரிக்கெட்டுக்கு இந்த மரபு இருக்கிறது.

- Advertisement -

இங்கு பள்ளி அல்லது கிளப் கிரிக்கெட்களில் கூட சிவப்புப்பந்தில் மூன்று அல்லது ஐந்து நாள் போட்டிகள் நடக்கும். இப்படியான போட்டிகளில் மக்கள் பெரிய ரன்களை கேட்பதை நீங்கள் பார்க்கலாம்.

நான் பள்ளி கிரிக்கெட்டில் விளையாடும் பொழுதே, நான் செட்டில் ஆகிவிட்டால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் இந்தக் குணம் எனக்கு மும்பை கிரிக்கெட்டில் இருந்து புகுத்தப்பட்டது.

நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவது என் மன வலிமையை அதிகரிக்க உதவுகிறது. வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெவ்வேறு சூழ்நிலைகளில்நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். இது மிகவும் முக்கியமானது மற்றும் வேடிக்கையானது.

ஒட்டு மொத்தமாக நான் கிரிக்கெட் ஷாட்களில் அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் எந்த கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுகிறேன் என்பது முக்கியம் கிடையாது. நான் எந்த ஷாட்டை விளையாடுகிறேன் எப்படி விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம். இதுதான் என்னுடைய மனதில் எப்போதும் இருக்கும்!” என்று கூறி இருக்கிறார்!