“என்னால் நடக்க முடியாம போறவரை.. ஐபிஎல் விளையாடுவேன்!” – மேக்ஸ்வெல் தடாலடி பேச்சு!

0
258
IPL

நாடுகளுக்கு இடையே சர்வதேச போட்டிகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டை வெகு சீக்கிரத்தில் ஐபிஎல் தொடர் கிளப் போட்டியாக மாற்ற இருக்கிறது என்பதுதான் கண்முன் இருக்கும் யதார்த்தம்.

டி20 கிரிக்கெட்டின் வருகையும் அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பும், மேலும் ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட்டை வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிகரமான விளையாட்டாக மாற்றியதும் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

- Advertisement -

எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை தங்களுடைய நாடுகள் அழைத்துக் கொள்வதற்கு, அவர்கள் எந்த கிளப் அணியில் விளையாடுகிறார்களோ, அந்த அணி நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கலாம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முன்பு ஒரு முறை கூறியிருந்தார். தற்பொழுது கிரிக்கெட் அதை நோக்கிதான் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் தங்களுடைய மரபு ரீதியான டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள். இதற்காக அவர்கள் ஐபிஎல் தொடரை தியாகம் செய்வது பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

இந்த வகையில் மேக்ஸ்வெல் வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது அவர் தன்னால் நடக்க முடியாமல் போகின்ற வரையிலும், தன்னுடைய கடைசி போட்டியாக ஐபிஎல் தொடரே இருக்கும் என்றும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “என்னுடைய கடைசி போட்டியாக அனேகமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போட்டிதான் இருக்கும். என் கேரியர் முழுவதும் எனக்கு ஐபிஎல் தொடர் எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது என்று நான் எப்பொழுதும் பேசி இருக்கிறேன்.

நான் சந்தித்த நபர்கள், நான் விளையாடிய பயிற்சியாளர்கள், என் தோளோடு தோள் நின்ற சர்வதேச வீரர்கள் இப்படி ஐபிஎல் தொடர் எனக்கு அவ்வளவு பயனுள்ளதாக என் வாழ்க்கையில் அமைந்திருக்கிறது.

நீங்கள் இரண்டு மாத காலம் ஏபி.டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி மாதிரியான வீரருடன் இணைந்து நெருக்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது எந்த ஒரு வீரருக்கும் மிகச் சிறந்த கற்றல் அனுபவம்.

நம்முடைய ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய பேர் இந்த முறை ஐபிஎல் தொடருக்கு வர இருக்கிறார்கள். இது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை உதவும். ஏனென்றால் எங்கு போல அங்கும் ஆடுகளம் உலர்ந்தும் பந்து திரும்பவும் செய்யும்.

இந்த உலகக் கோப்பையை வென்றவுடன் நாங்கள் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பேசினோம். அடுத்த இலக்கை நோக்கி திரும்புவது குறித்து எங்களது கவனம் இருக்கிறது. மேலும் பிபிஎல் தொடரில் இந்த கோடைக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!