“ஷாகின் அப்ரிடி வாழ்க்கையை நான் கெடுக்கல” – பாகிஸ்தான் டீம் டைரக்டர் ஹபிஸ் பேச்சு!

0
118
Hafeez

கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருக்கடி உண்டானது. இதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முழுமையாக கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

- Advertisement -

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் புதிய கேப்டனாக ஷான் மசூத் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் ஷாகின் அப்ரிடி ஆகியோர் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் மற்றும் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக வாகாப் ரியாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஷாஹீன் அப்ரிடிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இது தற்பொழுது விமர்சனமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக பேசி உள்ள முகமது ஹபிஸ் “அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்கவே அவருக்கு ஓய்வு கொடுக்க நாங்கள் நினைத்தோம். ஏனென்றால் அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்த ஓராண்டாக கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்கு நிறைய பணிச்சுமை இருக்கிறது.

இதற்கு முன்பு அணி நிர்வாகத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இனி வீரர்களின் பணிச்சுமை நிர்வகிக்கப்பட வேண்டும். எந்த ஒரு வீரர்களும் காயத்தால் போட்டிகளை இழக்கக்கூடாது. நான் யாருடைய கிரிக்கெட் வாழ்க்கையையும் கெடுக்க நினைக்கவில்லை.

மேலும் டி20 கிரிக்கெட் விளையாட ஷாஹீன் அப்ரிடி ஓய்வெடுக்கவில்லை. அவர் உடலில் வலிகள் இருந்தது தெரிந்தது. அவர் உடல் வசதியாக இல்லை. அணியின் இயக்குனராக ஒரு வீரர் காயம் அடையும் இடத்திற்கு செல்லாமல் தடுப்பது என் பொறுப்பு. எனவே இதிலிருந்து அவர் குணமடைய போதுமான அவகாசத்தை உறுதி செய்யவே ஓய்வு கொடுத்தேன்!” என்று கூறியிருக்கிறார்!