நான் இந்திய அணிக்கு திரும்பி வர மாட்டேன்.. எல்லாம் முடிந்தது – நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் திடீர் அறிவிப்பு!

0
45674
ICT

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை எடுத்துக் கொண்டால், பேட்ஸ்மேன்களும் சுழற் பந்துவீச்சாளர்களுமே அதிக முக்கியத்துவத்தை பெற்றவர்களாக இரு துறைகளிலும் இருப்பார்கள்.

இந்தியாவில் வேகப்பந்துவீச்சு என்பதை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் கபில்தேவ் அதற்கடுத்து ஜவகல் ஸ்ரீநாத் அதற்கு அடுத்து ஜாகீர் கான் என்று எளிதாகப் பட்டியல் போட்டுவிடலாம்.

- Advertisement -

இவர்களுக்கு அடுத்துதான் இஷாந்த் சர்மா, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் இன்று குறுகிய காலத்தில் பெரிய பட்டியல் போடும் அளவுக்கு நிறைய வேகப்பந்துவீச்சாளர்கள் வந்திருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர் குமார். வேகப்பந்து வீச்சில் ஸ்விங் பவுலிங்கில் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று இவரை சொல்லலாம். பந்தை இருபக்கமும் காற்றில் அலைய வைப்பதில் இவர் தேர்ந்த நிபுணர்.

ஆனால் ஏற்பட்ட காயம் இவரது வேகத்தை குறைக்க, தற்பொழுது இவர் இந்திய அணிக்கு வெளியில் இருக்கிறார். பந்து ஸ்விங் ஆனால் இப்பொழுதும் கூட அபாயகரமானவராகவே இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது தன் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசி உள்ள புவனேஸ்வர் குமார்
“நீங்கள் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடப் போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்த ஒரு காலகட்டத்தில், நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளராக இருக்கும்பொழுது, அது உங்களை தாக்கும் மற்றும் அந்த இடத்தில் இருந்து நீங்கள் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறீர்கள். நான் இப்பொழுது அந்தக் கட்டத்தில்தான் இருக்கிறேன்.

ஆமாம் நான் இந்திய அணியில் இப்பொழுது ஒரு அங்கம் கிடையாது. ஆனால் இது என்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. நான் ஏதாவது புதிதாக பந்துவீச்சில் முயற்சி செய்கிறேன் திரும்பி வருவதற்காக புதிதாக எதையும் திட்டமிடுகிறேன் என்பதை பற்றியது அல்ல. நான் கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே இப்பொழுது கவனம் செலுத்துகிறேன்.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக நான் விளையாடவில்லை. நல்ல கிரிக்கெட்டை விளையாட தேவையானதை செய்து வருகிறேன். நான் இந்திய அணிக்கு திரும்ப வருவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் அது கிடையாது.

நான் கிரிக்கெட்டில் எந்த வடிவமாக இருந்தாலும் சரி, மாநில லீக் போட்டிகளாக இருந்தாலும் கூட சரி, என்னுடைய பங்களிப்பை தர விரும்புகிறேன். விஷயங்கள் சரியாக நடந்தால் நான் திரும்பி வர முடியும். ஆனால் இது மட்டுமே என்னுடைய கவனம் கிடையாது!” என்று உறுதியாக கூறியிருக்கிறார்!