“எனக்கு கிடைத்த எல்லாத்தையும் என் மகனுக்கு கிடைக்க வைப்பேன்” – சச்சின் சபதம்!

0
464
Sachin

ஐபிஎல் டி20 தொடர் வரலாற்றில் தந்தையும் மகனும் விளையாடியதும், அதுவும் ஒரே அணிக்காக விளையாடியதும், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாற்றில் பதிவாகியது!

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் லெஜன்ட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.

- Advertisement -

பிறகு அவர் ஓய்வு பெற்றுவிட ரோகித் சர்மா வழிநடத்திக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளையாட வாய்ப்பு பெற்றார். இவர் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் கோவா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில் தனது மகன் குறித்து கூறும்பொழுது “எனக்கு என் குடும்பத்தின் ஆதரவு மிகச் சிறப்பாக கிடைத்தது. என்னுடைய அண்ணன் அஜித் டெண்டுல்கர் எதையும் தீர்வு காண்பதில் திறமையாக இருந்தார்.

என்னுடைய இன்னொரு அண்ணன் நிதின் டெண்டுல்கர் எனக்காக ஓவியம் வரைந்தார். என் அப்பா பேராசிரியராக இருந்தார். என் அம்மா எல் ஐ சி யில் பணியாற்றினார். அவர்கள் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

என்னுடைய மகனுக்கு எனக்கு கிடைத்த அதே சூழலை உருவாக்க நான் நினைக்கிறேன். நீங்கள் உங்களை பாராட்டினால் உலகம் உங்களை பாராட்டும். என் தந்தை எனக்கு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு கூறினார். நான் அதையே என் மகனுக்கும் சொல்கிறேன்.

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது ஊடகங்கள் என்னைப் பாராட்டின. நான் அவர்களிடம் என் மகன் விளையாட்டில் கவனம் செலுத்தவும் விளையாட்டை காதலிக்கவும் விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் என் மகனுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள். நான் இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் காயங்களால் மிகவும் பாதிக்கப்பட்டேன். இதனால் நான் இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து இருந்தேன். ஆனால் அப்பொழுது என்னுடைய மனைவி அஞ்சலி நேராக ஆஸ்திரேலியா வந்து, அறுவை சிகிச்சையை ரத்து செய்து, என்னுடன் இருந்து என்னை கவனித்துக் கொண்டார்” என்று கூறியுள்ளார்!