டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய பங்கு ஆற்றக்கூடிய இந்த வீரர் அணியில் இல்லையென்றால் தான் ஆச்சர்யம் – ரிக்கி பாண்டிங்

0
196
Ricky Ponting

நடந்த முடிந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக தினேஷ் கார்த்திக் பினிசிங் ரோலில் மிகச் சிறப்பாகப் பெங்களூர் அணிக்கு ஆட்டங்களை முடித்து தந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியோடு போட்டியிட்டு 5.50 கோடிக்கு பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை வாங்கி இருந்தது. இவர் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 16 ஆட்டங்களில் 55 ரன் சராசரியில் 330 ரன்களை அடித்திருந்தார். இதில் பத்துமுறை நாட்அவுட்டாக இருந்தார். அதிகபட்ச ஸ்கோர் 66* ஆகும். மேலும் 183 ஸ்ட்ரைக்ரேட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கராகவும் விளங்கினார்.

வருகின்ற செம்டம்பர் மாதம் டி20ஐ உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு பற்றி கிரிக்கெட் லெஜன்ட்டும், தற்போது ஐ.பி.எல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்ற கூடிய ரிக்கி பாண்டிங்கிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு அவர் “நானாக இருந்தால் நிச்சயம் அவரை தேர்வு செய்வேன். பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இல்லை ஆறாவது இடத்தில் இறங்க வைப்பேன். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அவர் வேற லெவலில் விளையாடி RCB அணிக்காக போட்டிகளை வெற்றிக்கரமாக முடித்தார்” என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர் “ஐ.பி.எல் தொடரை எடுத்துக்கொண்டால், உங்களின் சிறந்த வீரர்கள், குறைந்தது மூன்று அல்லது நான்கு போட்டிகளில் மிகச்சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று விரும்புகிறிர்கள். நீங்கள் விரும்பியபடி அந்த வீரரிடமிருந்து பெற முடிந்தால், அது அணிக்கு சிறப்பான வருவாய்தான். ஆனால் இந்த ஆண்டு RCB அணியின் மற்ற வீரர்களை விட தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு அதிக ஆட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்” என்று கூறினார்.

மேலும் இன்னும் விளக்கி தொடர்ந்து பேசிய அவர் “RCB அணியின் சிறந்த வீரர்களில் விராட்கோலிக்கு இந்த ஆண்டு சாதாரணமாகவே இருந்தது. மேக்ஸ்வெல் ஆரம்பத்தில் சிறப்பாகத் தொடங்கினார். கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் RCBஅணி சுழல கொஞ்சம் உதவினார். ஆனால் தினேஷ் கார்த்திக்தான் RCB அணிக்கு பெரியளவில் பங்களிப்பை செய்திருக்கிறார். அவர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எங்காவது இல்லாவிட்டால்தான் நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

தற்பொது நடைபெற்று வரும் செளத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் எப்படிச் செயல்படுகிறார்? அவருக்கு அதிகப் பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? எத்தனை போட்டிகளில் வாய்ப்பு பெறுவார்? என்பதைப் பொறுத்தே அவரது சர்வதேச கிரிக்கெட்டிற்கான எதிர்காலம் எப்படி அமையுமென தெரிய வரும்!