சிஎஸ்கே பவுலரை பாத்து தான், எப்படி பவுலிங் பண்ணனும்னு ஐடியா வந்துச்சு; அவங்க ஐடியா வச்சு அவங்களையே முடிச்சாச்சு – ஆடம் ஜாம்பா!

0
922

இந்த பிட்ச்ல எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று தீக்ஷனா வந்து வீசிய பிறகு எங்களுக்கு சில யோசனைகள் கிடைத்தது அதை பயன்படுத்திக் கொண்டோம் என்று பேசி உள்ளார் ஆடம் ஜாம்பா.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் போட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது. இந்த இடத்திலேயே சற்று தடுமாற்றம் கண்டது சிஎஸ்கே அணி.

- Advertisement -

இமாலய இலக்கை துரத்த களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு வழக்கமான துவக்கம் கிடைக்கவில்லை. இதனால் சற்று ஏமாற்றம் அடைந்தது சிஎஸ்கே. அடுத்து வந்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளானது.

சிவம் தூபே நம்பிக்கையளித்து அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் படர்னார்ஷிப் அமைக்க உதவாததால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 170 ரன்களுக்கு முடித்தது. இறுதியாக 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஸ்பின்னர்களுக்கு இந்த மைதானம் நன்றாக எடுபட்டது அந்த வகையில் ஆடம் ஜாம்பா முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் கொடுத்தார். அதுதான் திருப்பு முனையாகவும் அமைந்தது. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

- Advertisement -

“கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு இங்கே வந்தது கூடுதல் அழுத்தமாகத்தான் இருந்தது. இருப்பினும் முதலில் எந்த வகையில் பந்து வீசினால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. பின்னர் தீக்ஷனா பந்துவீசியதை பார்க்கையில், ஓரளவிற்கு யோசனைகள் கிடைத்தது. பந்தை வேகமாக வீசவேண்டும். லைன் சற்று முன்னதாகவும் வீச வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அதை பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுக்க முடிந்தது. மேலும் அழுத்தம் கொடுக்கவும் முடிந்தது.

ஓரிரு போட்டிகள் வெளியில் அமர்த்தி வைத்தாலும் அடுத்த போட்டியில் உள்ளே வரும் பொழுது என்னால் அழுத்தம் கொடுக்க முடிந்ததற்கு காரணம் பல வருடங்களாக நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஆஸ்திரேலியாவில் எனக்கு கிடைத்திருக்கும் ரோல் இப்படித்தான் ஒரு சில மைதானங்களில் மட்டுமே என்னை விளையாட வைத்திருக்கிறார்கள். மற்ற போட்டிகளில் உள்ளே வைத்திருப்பார்கள். ஆகையால் கிடைக்கும் போட்டிகளில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்புடன் இருப்பேன். அதைத்தான் செய்து கொடுத்திருக்கிறேன்.” என்றும் பேசினார்.