நான் தோனியை தொலைவிலிருந்து கவனித்தேன் ; கண்கள் மூலமாக அவரிடம் இருந்து திருடிக் கொண்டேன் – தோனியிடம் கற்றுக் கொண்டது பற்றி பாப் டு பிளிசிஸ்

0
1205
Faf

தென்னாப்பிரிக்க சர்வதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் வீரர் பாப் டு பிளிசிஸ் மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கேப்டன்ஷியில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னவென்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு அவரது பேட்டிங் பங்களிப்பு மிகவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களால் எல்லைச்சாமி என்று அன்பாக அழைக்கப்பட கூடியவர். ஆனால் அடுத்த நடந்த மெகா ஏலத்தில் அவரை வாங்க முடியாதது அந்த அணி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஒரு சோகமான விஷயமாக அமைந்தது.

தற்பொழுது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாப் டு பிளிசிஸ் மகேந்திர சிங் தோனியிடம் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பேசுகையில் ” அவர் எவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்பதை நான் எனது கேப்டன்ஷியில் எடுத்துக்கொண்ட ஒன்றாகப் பார்க்கிறேன். மேலும் நான் எனது வீரர்களுடன் மிகவும் தெளிவாக இருப்பதை உறுதி செய்கிறேன். இதுவும் அவரிடமிருந்து நான் எடுத்துக்கொண்ட பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

மகேந்திர சிங் தோனி இப்படியான காரணங்களால் மிகவும் கூலான கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். இந்த விஷயத்தில் அவரை மிஞ்சக்கூடிய ஆள் யாருமே கிடையாது.

- Advertisement -

நான் தொலைவில் இருந்து தோனியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களின் வழி நான் அவரிடமிருந்து திருடினேன். அவர் எப்படி இவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறார் என்று யோசித்தேன். அவரது வெற்றிக்கு காரணம் எதுவென்று சிந்தித்தேன். சர்வதேச கிரிக்கெட்டிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த கேப்டனாக இப்பொழுதும் வரை இருக்கிறார்.

ஆனால் நான் இதற்கு முன்பே தலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருந்தேன். நான் ஒரு கேப்டனாக தோனியோ, விராட் கோலியோ, கிரீம் ஸ்மித்தோ அல்லது ஸ்டீபன் பிளமிங்கோ கிடையாது. நான் என் சொந்த வழியில் இயங்கக்கூடியவன் அதே சமயத்தில் பிறரிடம் இருந்து விஷயங்களை எடுத்துக் கொள்ளக் கூடியவன்!” என்று கூறியிருக்கிறார்!